/* */

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன் எனக் கூறுவது வேடிக்கை

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்க ளில் இன்னும் மருத்துவக் கல்லூரி வராமல் இருப்பதற்கு காரணம் ஒன்றிய அரசுதான்

HIGHLIGHTS

நீட் தேர்வு  விலக்கு மசோதாவுக்கு  கையெழுத்திட மாட்டேன் எனக் கூறுவது வேடிக்கை
X

செய்தியாளர்களைச் சந்தித்த சுகாரதாத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆளுநர் கையெழுத்திட மாட்டேன் என கூறுவது வேடிக்கையாக உள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட கண் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளிகளின் கவனிப்பு பிரிவு, ஹோமியோபதி சிகிச்சை பிரிவு உள்ளிட்ட கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.

இந்த நிலையில், மேற்கண்ட கட்டிடங்களை பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்த நிலையில், தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இன்னும் மருத்துவக் கல்லூரி வராமல் இருப்பதற்கு காரணம் ஒன்றிய அரசுதான் எனவும், ஒன்றிய அரசு அனுமதி கொடுக்காததால் தான் மாவட்ட மருத்துவக் கல்லூரி தொடங்கு வதற்கு காலதாமதம் ஆகி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் பேசிய பேச்சுக்கு கருத்து தெரிவித்த அவர், நீட் தேர்வு விலக்கு மசோதாவானது தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ள சூழலில், கவர்னர் கையெழுத்திட மாட்டேன் என கூறுவது வேடிக்கையாகவே உள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கும், கவர்னருக்கும் இனிமேல் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அரசின் நலத்திட்டங்களை அரசோடு இணைந்து மக்களுக்கு செயல்படுத்த வேண்டிய ஆளுநர் அரசியல் செய்வது போல் எதிராக செயல்படுவது உள்நோக்கம் பொருந்தியதாகவே உள்ளது என அவர் பேசினார்.

Updated On: 14 Aug 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்