/* */

'24 மணி நேரமும் என் அறை கதவு திறந்திருக்கும்'- தென்காசி மாவட்ட ஆட்சியர்

‘பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க 24 மணி நேரமும் என் அறை கதவு திறந்திருக்கும்’- என தென்காசி மாவட்ட புதிய ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

24 மணி நேரமும் என் அறை கதவு திறந்திருக்கும்- தென்காசி மாவட்ட ஆட்சியர்
X

 தென்காசி புதிய மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன்

தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட துரை ரவிச்சந்திரன் பொதுமக்கள் குறை தெரிவிப்பதற்காக என் அறைக்கதவு 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கடந்த 2019 ம்வருடம் பிரிந்து புதிய மாவட்டமாக உருவானது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் முதல் ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து இரண்டாவது மாவட்ட ஆட்சியராக சமீரன் பொறுப்பேற்றார். பின்னர் மூன்றாவது மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜ் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து நான்காவது ஆட்சியராக ஆகாஷ் பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோது தென்காசி மாவட்ட ஆட்சியரும் இடம் மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக துரை ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

அதன்படி தென்காசி மாவட்டத்தின் புதிய மற்றும் ஐந்தாவது மாவட்ட ஆட்சியராக துரை ரவிச்சந்திரன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் பேட்டியின்போது கூறியதாவது:-

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான பணிகள் துரிதமாக நடைபெறவும் அரசின் நலத் திட்டங்கள் விவசாயிகளுக்கு முறையாக கிடைத்திடவும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில் பணியாற்றுவேன். சுற்றுலாத்தலமான குற்றாலத்தை முன்னேற்றும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து சுற்றுலாப் பயணிகளை கவருகின்ற வகையில் சுற்றுலா துறையின் மூலம் உரிய நிதிகளை பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.

எனக்கு முன்பு இருந்த ஆட்சித் தலைவர் ஆற்றிய பணிகளை தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுவேன். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மாவட்டத்தில் அகற்றப்பட்டது. அந்த நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். நமது மாவட்டத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் கனிம வளங்கள் உரிய முறையில் கோட்டாட்சியர் தலைவர் மூலம் எடை சரிபார்க்கப்பட்ட பின்னர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். நான்கு வழி சாலை பணிகள் நீண்ட காலமாக நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்களுடைய குறைகளை எந்நேரமும் என்னை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம். 24 மணி நேரமும் பொதுமக்களுக்காக என் அறை திறந்த நிலையில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரனுக்கு மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 6 Feb 2023 7:57 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...