/* */

குற்றாலம் மகளிர் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

ரேகிங் கொடுமைகள் நடைபெறாமல் இருக்க 1997 சட்டம், தடுப்பு நடவடிக்கைகள், தண்டனை விவரங்கள் குறித்து சிறப்பு அழைப்பாளர் பேசினார்.

HIGHLIGHTS

குற்றாலம் மகளிர் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
X

தென்காசி சட்ட பணிகள் குழு தலைவர் கூடுதல் சார்பு நீதிபதி நீதியரசர் ருஷ்டின் ராஜ் பேசிய காட்சி.

தென்காசி சட்டப்பணிகள் குழு சார்பாக குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் வைத்து கேலி வதைத் தடுப்புச் சட்டம் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கேலி வதை தடுப்புச் சட்டம் குறித்தும், கல்லூரிகளில் மாணவ-மாணவியர் இடையே நடைபெறும் ரேகிங் கொடுமைகள் நடைபெறாமல் இருக்க 1997 சட்டம் அதன் தடுப்பு நடவடிக்கைகள் தண்டனை விவரங்கள் எவ்வாறு உள்ளது என்பதை விளக்கி சிறப்பு அழைப்பாளர் தென்காசி சட்ட பணிகள் குழு தலைவர் கூடுதல் சார்பு நீதிபதி நீதியரசர் ருஷ்டின் ராஜ் பேசினார். தலைமை வகித்து பராசக்தி மகளிர் கல்லூரி முதல்வர் பேசினார். மேலும் கல்லூரி ஆன்ட்டி ராகிங் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மற்றும் முக்கிய கல்லூரி பேராசிரியர்கள், மூத்த வழக்கறிஞர் குலசேகரன், வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் குற்றாலம் காவல்துறை உதவி ஆய்வாளர் கோமதி நாதன் ஆகியோரும் முகாமில் கலந்து கொண்டு பேசினார். சட்டப்பணிகள் குழு ஒருங்கிணைப்பாளர் இராமசுப்ரமணியன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில் நீதிமன்ற பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் கல்லூரி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Updated On: 29 July 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  3. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  4. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  5. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  7. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  8. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  9. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  10. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!