/* */

கிராம உதவியாளர் பணியில் சேர விருப்பமா? இதை படியுங்கள் முதலில்

தென்காசி மாவட்ட வருவாய் அளவில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

HIGHLIGHTS

கிராம உதவியாளர் பணியில் சேர விருப்பமா? இதை படியுங்கள் முதலில்
X

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ். 

தென்காசி மாவட்ட வருவாய் அளகில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் கீழ்க்கண்ட விவரப்படி தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலும், நேரடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களின் உரிய கல்வித்தகுதி, படித்தல் மற்றும் எழுதுதல் திறனறிவுத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு ஆகியவை மூலமாக நிரப்பப்பட உள்ளன.

எனவே கீழ்குறிப்பிட்டுள்ள தகுதிகளை உடைய நபர்கள் 10.10.2022 முதல் 07.11.2022 மாலை 5.45 மணி வரை அலுவலக வேலை நேரத்தில் (காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை) கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிய விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பத்தினை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.தென்காசி வட்டத்தில் குணராமநல்லூர், ஆவுடையானூர், ஆழ்வார்குறிச்சி பகுதி- 2 கீழ ஆம்பூர், பாட்டபத்து, பாட்டாக்குறிச்சி, சில்லரைப்புரவு, குத்துக்கல்வலசை, சிவசைலம் 9 கிராமங்கள் காலி பணியிடங்களாக உள்ளது.

செங்கோட்டை வட்டத்தில் கணக்கபிள்ளைவலசை, நெடுவயல், வல்லம், இலத்தூர், வடகரைகீழ்பிடாகை, நாகல்காடு 6 கிராமங்கள் காலி பணியிடங்களாக உள்ளன.

ஆலங்குளம் வட்டத்தில் அணைந்தபெருமாள்நாடானூர், துப்பாக்குடி. சிவலார்குளம், மாறாந்தை, கீழப்பாவூர் பகுதி -2, மாயமான்குறிச்சி, சுப்பையாபுரம், நெட்டுர் 8 கிராமங்கள் காலி பணியிடங்களாக உள்ளன.

வீரகேரளம்புதூர வட்டத்தில் இராஜகோபாலபேரி, வாடியூர், வீராணம், வடக்குகாவலாக்குறிச்சி, வெள்ளகால், ஆனைகுளம் 6 கிராமங்கள் காலி பணியிடங்களாக உள்ளதன.

கடையநல்லூர் வட்டத்தில் நயினாரகரம், சேர்ந்தமங்கலம், கடையநல்லூர். கிளாங்காடு, பொய்கை, புளியங்குடி, சிந்தாமணி, தலைவன்கோட்டை, தி.நா.புதுக்குடி, நகரம். 10 கிராமங்கள் காலி பணியிடங்களாக உள்ளன.

சங்கரன்கோவில் வட்டத்தில் கரிவலம்வந்தநல்லூர், வடக்குபுதூர், சங்கரன்கோவில், பந்தபுளி, பனையூர் 5 கிராமங்கள் காலி பணியிடங்களாக உள்ளன. சிவகிரி வட்டத்தில் இனாம்கோவில்பட்டி, இராமநாதபுரம். அரியூர். 3 கிராமங்கள் காலி பணியிடங்களாக உள்ளன. திருவேங்கடம் வட்டத்தில் வாகைகுளம், கலிங்கப்பட்டிபகுதி-1, திருவேங்கடம், சுப்பையாபுரம், மருதங்கிணறு, அ.மதுராபுரி 6 கிராமங்கள் காலி பணியிடங்களாக உள்ளன.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் வருமாறு:-

இருப்பிடச் சான்று ஒளிநகல், சாதிச்சான்று ஒளிநகல், வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஒளிநகல், ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஒளிநகல்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கல்வித் தகுதி சான்று ஒளிநகல்கள்,பிறப்பு சான்று, ஆதரவற்ற விதவையாக இருப்பின் சான்று , மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்குரிய அடையாள அட்டை நகல், முன்னாள் இராணுவத்தினராக இருந்தால் அடையாளஅட்டை நகல், இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் நகல் (01.07.2022க்குள் முந்தையது), விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-3.

விண்ணப்பத்தாரர் தகுதிகள் வருமாறு;-

1. ஒரு வருவாய் கிராமத்திற்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே அளிக்க வேண்டும்.

2. சம்பந்தப்பட்ட வட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்.

3. சம்பந்தப்பட்ட வட்டத்தை தவிர இதர வட்டங்களைச் சேர்ந்தவர்கள், இதர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

4. குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (01.07.2022 அன்று)

5. 1.07.2022 அன்று 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

6. பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32, இதர வகுப்பினருக்கு அதிகபட்ச வயது 37.

(மாற்றுத்திறனாளி, ஆதரவற்ற விதவை மற்றும் முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு தொடர்புடைய அரசு ஆணைகளின்படி வயது தளர்வுகள் பின்பற்றப்படும்.)

7. தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதஃபடிக்க தெரிந்திருக்க வேண்டும்.

8. சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

9. எந்தவித குற்றவழக்கிலும் ஈடுபடாதவராக இருக்க வேண்டும்.

10. விண்ணப்பதாரரின் கணவரோ அல்லது மனைவியோ உயிருடன் இருக்கும் பொழுது வேறு திருமணம் செய்தவராக இருக்கக் கூடாது.

11 விண்ணப்பத்துடன் அனைத்து சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

12 விண்ணப்பதாரர் தமது விண்ணப்பத்திற்காக எவ்வித சிபாரிசும் நாடக்கூடாது. எவ்வகையிலாவது சிபாரிசு செய்வது தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்ப படிவம், தேர்வுமுறை, இனசுழற்சி குறித்த இதர விபரங்களை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதள முகவரியில் தனித்தனியாக சம்பந்தப்பட்ட வட்டங்களுக்குரிய இணைப்புகளில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம். மேலும் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம். எனவே விண்ணப்பத்தினை மேற்காண்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனைத்து இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சலிலோ 07.11.2022-மாலை 5.45-க்குள் அனுப்பிட வேண்டும். மனுக்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதியும் உள்ளது. அதற்கான லிங்க் விபரங்கள் மேற்சொன்ன மாவட்ட இணையதள முகவரியில் வெளியிடப்படும். ஏதாவது ஒரு வழிமுறையில் தான் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். உரிய இணைப்புகளின்றியும், கால தாமதமாகவும் வரப்பெறும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Oct 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்