/* */

தென்காசியில் புதிய விளையாட்டுகள் குறித்து புத்தாக்க பயிற்சி முகாம்

தென்காசி மாவட்டத்தில் புதிய விளையாட்டுகள் குறித்து புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் புதிய விளையாட்டுகள் குறித்து புத்தாக்க பயிற்சி முகாம்
X

ஆய்க்குடி ஜேபி பொறியியல் கல்லூரியில் புதிய விளையாட்டுகள் குறித்த புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ‌தென்காசி மாவட்ட சார்பாக புதிய விளையாட்டுகளின் புத்தாக்க பயிற்சி முதன்மை கல்வி அலுவலர் கபீர் அவர்களின் வழிகாட்டிகளின்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கு ஆய்க்குடி ஜேபி பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

இதில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் ஆர்வமுடன் பங்கு பெற்றனர். வில் வித்தை, இரண்டு வகையான கராத்தே, கிக் பாக்ஸிங், ரோல்பால், மால்கம்பம் மற்றும் சிலம்பம் ஆகிய விளையாட்டு வல்லுனர்கள் சிறப்பாக நடத்தினர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணன் தலைமை தாங்கினார். ஆய்க்குடி ஜேபி பொறியியல் கல்லூரியின் முதல்வர் ஜெயராஜ் மற்றும் மனோகர் சாமுவேல் விளையாட்டு வழிகாட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ராமநாதன், ஜான்சன், கணபதி ராமன், மனோஜ், செல்வம், பிரதீப், ஆர்த்தி விநாயகம், சந்திரசேகர் ஆகியோர் செயல்பட்டனர். உடற்கல்வி ஆசிரியர் கணபதி ராமன் நன்றி தெரிவித்தார்

Updated On: 16 March 2022 7:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  2. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  3. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  4. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  6. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  7. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  8. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!