/* */

தென்காசியில் 15-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசியில் 15-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

தென்காசியில் 15-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
X

மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்.

தென்காசி மாவட்டத்தில் 2022 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 15.12.2022 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமை தாங்குகிறார். அனைத்து துறை அலுவலர்களும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணையும் குறிப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுவிற்கான ஒப்புகையும் மனுவின் கோரிக்கை தொடர்பான விபரங்களும் அனைத்து வகை கைபேசிகளிலும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இக்குறைதீர் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதேபோல் தென்காசி மாவட்டத்தில், உணவு தயாரிப்பு தொழில் துவங்க ரூ.10 லட்சம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.

தென்காசி மாவட்டத்தில், உணவு வகைகள் தயாரித்தல் தொழிலை விரிவாக்கம் செய்தல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு இத்திட்டத்தில் பயன்பெறலாம். திட்டத் தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தங்களின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கி மூலம் கடனாக வழங்கப்படும்.

பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (பிஎம்எப்எம்இ) 2020-2021 ம் ஆண்டு முதல் 2024-2025 ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகிறது.

இதுவரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் டிசம்பர் மாதம் முதல் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையங்கள் மூலமாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

பாரத பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் புதியதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் ஏற்கனவே உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள்இ சுய உதவிக்குழுவினர்இ உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர்இ உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன்பெறலாம். ரூ. 1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவுப்பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவிபெற தகுதி பெற்றவையாகும்.

இத்திட்டத்தின் கீழ் உணவுப்பதப்படுத்தல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து வற்றல் தயாரித்தல், ஊறுகாய் தயாரித்தல், அரிசி ஆலை, உலர்மாவு மற்றும் இட்லி தோசைக்கான ஈரமாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல்,மரச்செக்கு எண்ணெய், கடலை மிட்டாய், முறுக்கு, இனிப்பு மற்றும் கார வகை தின்பணடங்கள் தயாரித்தல், சாம்பார் பொடி, இட்லி பொடி, ரசப்பொடி உள்ளிட்ட மசாலா பொடிகள் தயாரித்தல், காப்பிக்கொட்டை அரைத்தல், வறுகடலை, சத்து மாவு, பால் பதப்படுத்துதல் மற்றும் பால் பொருட்கள் தயாரித்தல்,உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கவும் மற்றும் தொழில்நுட்பத்ததை மேம்படுத்தவும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

திட்டத் தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தங்களின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளின் மூலம் கடனாக வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் 35 சதவிகிதம் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை அரசு மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற

https://pmfme.mofpi.gov.in/pmfme

என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். இத்திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற பொதுமேலாளர்இ மாவட்ட தொழில்மையம் இ திருமலைகோவில் ரோடுஇ குத்துக்கல்வலசைஇ தென்காசி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04633-212347, 8939273253 என்ற தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி தொழில் தொடங்கி பயன்பெற வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Dec 2022 12:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?