/* */

சுரண்டையில் மதிமுக துணை பொதுச் செயலருக்கு உற்சாக வரவேற்பு

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரனுக்கு வரவேற்பளித்தனர்.

HIGHLIGHTS

சுரண்டையில் மதிமுக துணை பொதுச் செயலருக்கு உற்சாக வரவேற்பு
X

சுரண்டை அண்ணா சிலை அருகே மதிமுக துணை பொதுச் செயலாளர் தி மு.ராஜேந்திரனுக்கு மதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள தி.மு. ராஜேந்திரனுக்கு சுரண்டை அண்ணா சிலை அருகே மதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்

தென்காசி மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு‌.ராஜேந்திரன் சமீபத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உட்கட்சித் தேர்தலில் துணை பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். துணை பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்ட அவர் நேற்று மாலையில் சுரண்டை நகராட்சி பகுதிக்கு வருகை தந்தார் அப்போது அவருக்கு சுரண்டை நகர மற்றும் மாவட்ட மதிமுகவினர் வானவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பளித்தனர்.

முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அவர் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எஸ். ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.டி. நடராஜன், நகர செயலாளர் துரைமுருகன், தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் சுதா பரமசிவன், குருவிகுளம் ராஜகோபால், சுந்தர்ராஜ், தென்காசி ஒன்றிய செயலாளர் வல்லம் மணி, மாரிச்செல்வம், தென்காசி நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், கீழப்பாவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம உதய சூரியன், ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் மருதச்சாமிபாண்டியன், கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகச்சாமி, மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி என்ற மாரிமுத்து, கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் செல்ல சக்திவேல், தென்காசி மாவட்ட இளைஞரணி நடுவை சோ முருகன், மாநில திட்டக்குழு உறுப்பினர் கோபிநாத், வழக்கறிஞர் சுப்பையா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன், சென்னை ராமதாஸ், அழகுதுரை, எஸ் எஸ் முருகன், சமுத்திரம், கதிரவன், அண்ணாநகர் முருகன், வேல் என்ற ராசா, ஏடிஎன் செந்தில்குமார், சுடலைராஜ், பிளம்பர் துரை, ராஜகோபால், மாணிக்கம், கீழச்சுரண்டை திருமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 29 March 2022 5:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்