/* */

செய்தியாளர்களை வெளியேறச் சொன்ன மாவட்ட ஆட்சியர்: முற்றுகையிட்ட விவசாயிகள்

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்திலிருந்து பத்திரிக்கையாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியேறக் கூறியதால் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

செய்தியாளர்களை வெளியேறச் சொன்ன மாவட்ட ஆட்சியர்: முற்றுகையிட்ட விவசாயிகள்
X

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு முகாமில், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் பங்கேற்ற சூழலில், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் செய்தி சேகரிக்க நின்று கொண்டிருந்த செய்தியாளர்களை கூட்டத்திலிருந்து வெளியே செல்லும்படி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் கூறினார்.

தொடர்ந்து, அதற்கு விவசாயிகள் சிலர், இது அரசு அதிகாரிகளின் தனிப்பட்ட கூட்டம் இல்லை எனவும், இது விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டம். இந்தக் கூட்டத்திலிருந்து பத்திரிக்கையாளர்களை ஏன் வெளியே செல்ல சொல்கிறீர்கள் என விவசாயிகள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், இந்த அரங்கத்தில் யார் அமர வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது நான் தான், நீங்கள் அல்ல என விவசாயிகளுக்கு பதிலளிக்கவே, ஆத்திரம் அடைந்த விவசாயிகள் பத்திரிக்கையாளர்கள் இல்லையென்றால் நாங்கள் இந்த கூட்டத்தை புறக்கணிப்போம் என மாவட்ட ஆட்சித் தலைவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அரசு அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் உள்ளே வரக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏன் கூறுகிறார்கள்? விவசாயிகளின் குறைகளை அரசிற்கு எடுத்துரைக்கும் பத்திரிகையாளர்களை ஏன் வெளியே செல்ல சொல்கிறீர்கள் என தொடர்ந்து கேள்விகள் எழுப்பி மாவட்ட ஆட்சித் தலைவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கமானது பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

Updated On: 24 Feb 2023 1:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?