/* */

தென்காசி காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுமான பணி: டிஜிபி ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை டிஜிபி ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

தென்காசி காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டுமான பணி: டிஜிபி ஆய்வு
X

புதியதாக கட்டப்பட்டு வரும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தமிழக காவல் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், மாவட்டம் வாரியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு இன்று தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்பொழுது, புதிதாக பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்டார்.

மேலும், புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் காவல் துறையில் உள்ள பல்வேறு பிரிவினர்களுக்கு தேவையான அறைகள் கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு பணியை மேற்கொண்டார். தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அளித்த பேட்டியில் கூறியதாவது:


தமிழகத்தில் உள்ள எல்லைப் பகுதிகளான கோவை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் எல்லையோர சோதனை சாவடிகளை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் காவலர்கள் சோதனை சாவடியில் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழக முழுவதும் காவல்துறையினரால் நடத்தப்பட்ட 3 கஞ்சா தடுப்பு ஆபரேஷன் போது 20,000 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 2000 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 750 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்..

மேலும், தமிழகத்தில் போதையில்லா தமிழக உருவாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதேபோல் இப்போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மாற்று வழியை தேடி போதை மாத்திரைகள் உள்ளிட்ட பழக்கத்தை நாடி செல்வதாக தகவல் வருகிறது. அதனை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Updated On: 20 March 2023 4:16 AM GMT

Related News