/* */

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்: தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வாக்குவாதம்

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்: தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வாக்குவாதம்
X

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவி மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் நிதி ஒதுக்குவதில் முறைகேடு செய்வதாக சக கவுன்சிலர் குற்றச்சாட்டால் மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் வாக்குவாதம்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

முதலாவதாக கூட்டத்தில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் பேசப்பட்டது. அப்போது கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் கனிமொழி மற்றும் மதி மாரிமுத்து ஆகியோர், தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் ஆகியோர் நிதி ஒதுக்குவதில் முறைகேடாக ஈடுபட்டு கொண்டு அவர்களுக்கு மட்டுமே அதிகப்படியான நிதியை ஒதுக்கி மற்ற கவுன்சர்களுக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுப்பதாகவும் குற்றச்சாட்டை வைத்தனர்.

தலைவருக்கு ஒரு கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், துணைத்தலைவதற்கு 80 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற கவுன்சிலர்களுக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருப்பதாகவும், அனைவருக்கும் பொதுமான நிதியை ஒதுக்கி தர வேண்டும் என அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கு நீண்ட நேரமாக பதில் அளிக்காமல் இருந்த தலைவர் மற்றும் துணைத் தலைவர், திடீரென நீங்களும் நாங்களும் ஒன்று அல்ல; நீங்கள் வேறு நாங்கள் வேறு. எனக்கும் உங்களுக்கும் வித்தியாசம் உள்ளது. நீங்கள்துணைத் தலைவருக்கு ஓட்டளிக்கவில்லை. அதனால் நீங்கள் கூறும் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியாது என திமுக கவுன்சரை பார்த்து ஆவேசமாக கூறினார். இதனையடுத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் கூட்டத்தை பாதியிலேயே முடித்து கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே வெளியேறினார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 7 July 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...