/* */

குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைப்பு

குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை, திமுக புறக்கணித்ததன் காரணமாக தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது

HIGHLIGHTS

குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல்  2-வது முறையாக ஒத்தி வைப்பு
X

குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

தென்காசி மாவட்டத்தின் சுற்றுலா ஸ்தலமான குற்றாலம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 8 உறுப்பினர்களில் திமுக 4, அதிமுக 4 உறுப்பினர்கள் என சம பலத்துடன் உள்ளது. கடந்த 4-ஆம் தேதி நடந்த தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை திமுகவினர் புறக்கணித்ததால் அப்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பேரூராட்சி கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் (கலால்) துணை ஆணையர் ராஜமனோகர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் துணை ஆட்சியர் ஷீலா ஆகியோர் தேர்தலை நடத்த 9.30 மணி முதல் காத்திருந்தனர்.

ஆனால் அதிமுக உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே கூட்ட அரங்கிற்கு வந்து இருந்தனர். திமுக உறுப்பினர்கள் இம்முறையும் புறக்கணிப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து 10.05 மணிக்கு தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 March 2022 8:07 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...