/* */

குற்றாலம் மருத்துவர் வீட்டில் திருட்டு: பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கைது

குற்றாலத்தில் மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து 105 கிராம் நகை திருட்டில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Salem Rowdy
X

Salem Rowdy

தென்காசி மாவட்டம், குற்றாலம் ராமாலயம் பகுதியில் வசித்து வருபவர் கிரந்தர் சர்க்கரவர்த்தி (53). மருத்துவரான இவர் மத்தளம்பாறையில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 11-ஆம் தேதி தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அன்று இரவு இவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த வளையல், கம்மல் உள்ளிட்ட 105 கிராம் தங்கச் சாமான்களை திருடிச் சென்றனர்.

இது தொடர்பாக கிரந்தர் சர்க்கரவர்த்தி குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தென்காசி டி.எஸ்.பி. நாகசங்கர் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜகுமாரி, சுந்தரி மற்றும் ராஜசேகர், மாரிராஜ், குணசேகரன், கணேஷ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை குழுவினர் ராமாலயப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று தனிப்படை போலீசார் குற்றாலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையிலும், சிசிடிவி காட்சிகளில் பார்த்தவர்கள் போன்று இருந்ததால் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பிரபல கொள்ளைக் கும்பல் என்பது தெரிய வந்தது. விசாரனையில் வீரவநல்லூரை சேர்ந்த மந்திரமூர்த்தி (33), மேலப்புதுக்குடியை சேர்ந்த டேனியல் பிரகாஷ் (36), கன்னியாகுமரி மாவட்டம் அழகர் பாறையை சேர்ந்த

வேல்முருகன் (36),ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 75 கிராம் தங்க நகைகள் மற்றும் இரும்பு கம்பி, கொள்ளைக்கு பயன்படுத்திய கேரள மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் தெய்வம் செய்தியாளர்களிடம் கூறுகையல், குற்றாலம் ராமாலயத்தில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து தேடிய போது குற்றாலத்தில் சந்தேகம் படும்படியாக நின்றவர்களை பிடித்து விசாரனை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியதைத் தொடர்ந்து அவர்களிடம் தீவிரமாக விசாரனை நடத்தியதில் பல வருடங்களாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்த பிரபல கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 75 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேலும் இந்த கும்பல் குறித்து தீவிர விசாரனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Updated On: 22 Oct 2023 5:36 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  3. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  4. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  5. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  6. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  8. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  9. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  10. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!