/* */

பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தென்காசி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

பெண் குழந்தையை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
X

பெண் குழந்தையை பெற்று எடுத்த தாய்மார்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவமனையுடன் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை இணைந்து நடத்திய "பெண்குழந்தைகளை காப்போம், மற்றும் பெண்குழந்தைகளை கற்பிப்போம்" (பேட்டி பச்சோ பேட்டி படாஹோ ) என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். சமூக நலத்துறை திட்ட அலுவலர் மதிவதனா வரவேற்புரை ஆற்றி இத்திட்டம் பற்றி பேசினார்.

இந்த விழாவினை மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, 50 பெண் குழந்தைகளின் தாய்மார்களுக்கு மரக்கன்றுடன் பாராட்டு சான்றிதழ் .மற்றும்நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இந்திய குழந்தைகள் மருத்துவர்கள் சங்கம் தென்காசி பிரிவு உடன் இணைந்து உலக தாய்ப்பால் வார விழா ஆரம்பிக்கப்பட்டது .தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு மருத்துவமனையில் இயங்கிவரும் தாய்ப்பால் வங்கிக்கு அமிர்தம் தாய்ப்பால் அறக் கட்டளை மூலமாக தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கிய கோகில பிரியா ,திருவேங்கடம் மற்றும் கிரேஸ் டயானா ஸ்டீபன்,பாவூர்சத்திரம் அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

இந்த விழாவில் தென்காசி மாவட்ட இணை இயக்குனர் நல பணிகள் மரு. பிரேமலதா முன்னிலை வகித்து பெண்குழந்தைகளின் பாதுகாப்பை குறித்தும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை குறித்தும் சிறப்புரை ஆற்றினார். துணை இயக்குனர் சுகாதார பணிகள், முரளி சங்கர் பெண்குழந்தைகளின் பாதுக்காப்பு மற்றும் தடுப்பூசியின் அவசியத்தை குறித்தும் சிறப்புரை வழங்கினார்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு .ஜெஸ்லின் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் முன்னேற்றம் குறித்தும் தென்காசி மருத்துவமனையில் இயங்கி வரும் தாய்ப்பால் வங்கியின் செயல்பாடு குறித்தும் தென்காசி மருத்துவமனையில் தாய்ப்பால் தானம் வழங்கிய இரண்டு சகோதரிகளை வாழ்த்தியும் பேசினார்.

இந்தியன் குழந்தைகள் மருத்துவ சங்கம் தென்காசி பிரிவு தலைவர் அப்துல் அஸிஸ் சிறப்புரை ஆற்றினார். குழந்தைகள் மருத்துவர் உமாகதிரேசன் மற்றும் சமூக நல திட்ட அலுவலர் மதிவதனா விழாவினை ஒருங்கிணைத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர் .

இந்த விழாவில் சுமார் 100 தாய்மார்கள் பங்கேற்றனர் . குழந்தைகள் தலைமை மருத்துவர்.கி .கீதா நன்றியுரை வழங்கினார். துணை ஆட்சியர் திருமதி .அனிதா, மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் மரு .செல்வபாலா, மகப்பேறு தலைமை மருத்துவர் மரு .புனிதவதி, குழந்தைகள் மருத்துவர்கள் மரு .அன்னபேபி, மரு. மகேஷ், மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் பத்மாவதி, திருப்பதி, செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர் .

Updated On: 2 Aug 2023 5:21 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...