/* */

பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட்டில் உச்சம் தொட்ட மிளகாய் விலை-ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை

பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட்டில் மிளகாய் வரத்து குறைவால் விலை உச்சம் தொட்டது.

HIGHLIGHTS

பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட்டில் உச்சம் தொட்ட மிளகாய் விலை-ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை
X

பாவூர்சத்திரம் காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ள மிளகாய் மூட்டைகள். 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சுரண்டை, சாலைப்புதூர், நாகல்குளம், மேல பட்டமுடையார்புரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், செட்டியூர், நாட்டார்பட்டி, அரியப்பபுரம், குறுங்கா வனம், வெள்ளக்கால், இடையர்தவணை, குறும்பலாபேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகள் மற்றும் மிளகாய் போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். அவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். இந்த ஆண்டு மிளகாய் செடியில் அதிக வைரஸ் நோய் பாதிப்புகள் ஏற்பட்டதால் விளைச்சல் மிகவும் குறைந்தது.

இதனால் பாவூர்சத்திரம் காய்கறி சந்தைக்கு சுற்றுக் கிராம பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் மிளகாய் வரத்து குறைந்து உள்ளது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மிளகாயின் விலை கணிசமாக அதிகரித்து வந்தது. இன்று சுமார் 3 மடங்கு அதிகரித்து ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனையானது.

தமிழகம் முழுவதும் மட்டுமன்றி மைசூர் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மிளகாய் கொள்முதல் விலையும் ஒரே விலையாகவே உள்ளது. வைரஸ் நோயில் இருந்து தப்பிய மிளகாய் செடிகளின் காய்கள் நல்ல விலைக்கு செல்வதால் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் மிளகாய் விலை விற்பனையாகி வருவதாக விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மிளகாய் பயன்படுத்தும் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறுவதாக கூறினர்.

மிளகாய் செடியில் நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கு தொடர் மழையும் காரணம் என்று விவசாயிகள் கூறினார். இருப்பினும் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால் எங்கள் நஷ்டத்தை ஓரளவு ஈடுகட்டும் என்று நம்புகிறோம். ஆனால், ஒரு சில விவசாயிகளுக்கு இந்த விளைச்சலும் இல்லை என்று விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

Updated On: 22 Jun 2023 5:19 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி