/* */

சுரண்டை அருகே பெண்களிடம் செயின் பறிப்பு: இளைஞர்கள் இருவர் கைது

சுரண்டை அருகே பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

சுரண்டை அருகே பெண்களிடம் செயின் பறிப்பு: இளைஞர்கள் இருவர் கைது
X
செயின் பறிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞர்கள்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள துவரங்காடு மற்றும் திரிகூடபதி விலக்கு பகுதி மற்றும் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வவி நாயகர்புரம் வடக்கு பாண்டியனார்சாலை ஆகிய பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் பெண்களிடம் செயின் பறித்த குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சுரண்டை இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி, பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, கிருஷ்ணன், ஜோதிவேல் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கீழப்பாவூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த தொழிலாளி முப்புடாதிமுத்து (வயது28), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (37) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் குற்றாலம் அருேக உள்ள மெஞ்ஞான புரத்தில் கடந்த ஆண்டு இரவு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடமும், 2 பேரும் சேர்ந்து செயினை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டனர்.

Updated On: 19 Jan 2023 5:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  5. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு