/* */

தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தென்காசியில் 233 பயனாளிகளுக்கு ரூ.86.52 இலட்சம் மதிப்பிலான தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை எம்பி தனுஷ் எம்.குமார் வழங்கினார்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
X

தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தர ராஜ் தலைமையில் தென்காசி சட்ட மன்ற தொகுதிக்குற்பட்ட 233 பயனாளிகளுக்கு ரூ.86.52 இலட்சம் மதிப்பிலான தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் வழங்கினார்.

மகளிர் திட்டத்தின் சார்பில் வட்டார வணிக வள மையம் மூலம் தொழில் முனைவோருக்கு கடனுதவி ரூ.34.75 இலட்சம் மதிப்பில் 60 பயனாளிகளுக்கும், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் இணையவழி இலவச பட்டா 40 பயனாளிகளுக்கும், மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 47 பயனாளிகளுக்கும், மின் மோட்டாருடன் கூடிய ரூ.21,000 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் 4 பயனாளிகளுக்கு , வருவாய் துறையின் மூலம் இணையவழி இலவச பட்டா 20 பயனாளிகளுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 37 பயனாளிகளுக்கு மாற்றுத் திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை, முதிர் கன்னி உதவித்தொகை, விதவை உதவித்தொகை ஆகிய உதவித் தொகைக்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு பத்திரம் 5 பயனாளிகளுக்கும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் ரூ.2.50 இலட்சம் மதிப்பிலான முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பிரேத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர்களை 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மானா வாரி நிலங்களின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை அமைக்கரூ.5.00 இலட்சம் மானியத்திற்கான காசோலைகள் 5 பயனாளிகளுக்கும், கிராம அளவிலான இயந்திரங்கள் வாடகை மையம் ரூ.16.00 இலட்சம மதிப்பில் மானியத் தொகை 2 பயனாளிகளுக்கும், தாட்கோ அலுவலகத்தின் மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் மற்றும் தாட்கோ மானியம் மூலம் பயணிகள் ஆட்டோ, ஜெராக்ஸ் கடை அமைப்பதற்கான 3 பயனாளிகளுக்கு ரூ.15.39 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித்(2021-2022) இத்திட்டத்தின் கீழ் பந்தல் சாகுபடி பெண்களால் நடத்தப்படும் சிறிய அளவிலான காளான் வளர்ப்புக் கூடம் அமைக்க ரூ.2.30 இலட்சம் மானியத்திற்கான காசோலைகள் 3 பயனாளிகளுக்கும், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் தொழில் முனைவோர் மற்றும் இளைஞர் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு மானிய தொகை ரூ.1.78 இலட்சத்திற்கு ஆட்டோ, மற்றும் லோடு ஆட்டோ, வேளாண்மைத் துறையின் மூலம் கூட்டுப் பண்ணையம் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.5.00 இலட்சம் மானியத்துடன் கூடிய டிராக்டர் என மொத்தம் 233 பயனாளிகளுக்கு ரூ.86.52 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் ஷீலா, வேளாண்மை துறை இணை இயக்குநர் தமிழ் மலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலர் ஜெய பிரகாஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் குணசேகரன் மற்றும் அனைத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 27 April 2022 12:40 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்