/* */

குற்றாலம் சாரல் விழா: லோகோ வடிவமைப்பவர்களுக்கு பரிசு

Creative Logo Design- குற்றாலம் சாரல் விழா. லோகோ வடிவமைப்பவர்களுக்கு ரூ. 10,000 ரொக்கபரிசு அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

HIGHLIGHTS

குற்றாலம் சாரல் விழா: லோகோ வடிவமைப்பவர்களுக்கு பரிசு
X

Creative Logo Design- தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது பருவநிலை நிலவி வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக சாரல் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு சாரல் திருவிழா ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாரல் திருவிழா நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது.


சாரல் விழாவிற்கான சின்னம், வடிவமைக்கப்பட உள்ளது. சாரல் விழாவிற்கான சின்னம் வடிவமைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் சாரல் விழாவிற்கான சின்னத்தினை வடிவமைத்து edm.tenkasi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.07.2022 க்குள் அனுப்புமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்வு செய்யப்படும் சின்னத்தை வடிவமைத்தவருக்கு ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) ரொக்கப் பரிசு வழங்கப்படும். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 July 2022 7:29 AM GMT

Related News