/* */

வேடல்: ஆடி மாதத்தையொட்டி செல்லியம்மனுக்கு 108 பால்குட சிறப்பு அபிஷேகம்

பழைமை வாய்ந்த செல்லியம்மன்‌ திருக்கோயில் 8 கால் மண்டபத்துடன் புணரமைக்கபட்டு கடந்த ஜீன் மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது .

HIGHLIGHTS

வேடல்:  ஆடி மாதத்தையொட்டி செல்லியம்மனுக்கு 108 பால்குட சிறப்பு அபிஷேகம்
X

வேடல் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 108 பால்குட அபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம், காலூர் ஊராட்சிக்கு பட்டது வேடல் கிராமம். இக்கிராம ஏரிக்கரை அருகில் பல நூற்றாண்டுகளாக அமைந்துள்ள ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் சிதிலமடைந்து கடந்த ஜனவரி மாதம் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு எட்டு கால் மண்டபம் மற்றும் செல்லியம்மன் மூலவர் கோபுரம் பல லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்திற்கு பிறகு முதல் ஆடி மாதம் செவ்வாய்கிழமையொட்டி காலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் ச.சகுந்தலாசங்கர் தலைமையில் 108 பெண்கள் காப்பு கட்டி பால்குடம் தலையில் சுமந்து கிராம வீதிகளில் ஊர்வலமாக வந்து செல்லியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

இவ்விழாவினை ஒட்டி பதினாறு கலசங்கள் நிறுவி சிறப்பு யாகம் நடைபெற்று கலச நீர்கொண்டு செல்லியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.இதனை தொடர்ந்து சிறப்பு வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் தீப ஆராதனையுடன் காட்சி அளித்தார்.

கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு , அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் ஊஞ்சல் சேவை நடைபெற உள்ளது.

Updated On: 19 July 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...