/* */

தென்காசி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு முகாம்

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது .

HIGHLIGHTS

தென்காசி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சிறப்பு முகாம்
X

பட விளக்கம்: தென்காசி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் முகாமினை குத்து விளக்கு ஏற்றி வைத்த போது எடுத்த படம்.

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது . இம்முகாமினை தென்காசி மாவட்ட சுகாதார நலபணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா தலைமை வகித்து வரவேற்புரை ஆற்றினார் , தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஜெஸ்லின் முன்னிலை வகித்தார் . சிறப்பு விருந்தினராக தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். .

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் முரளிசங்கர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை பிரசவ பிரிவு தலைமை மருத்துவர் புனிதவதி , இந்திய மருத்துவ சங்கத் தலைவர் மருத்துவர் அஜீஸ் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் .

இம்முகாமானது காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற்றது , இதில் 500 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர் .

தென்காசி அரசு தலைமை மருத்துவமனை பிரசவ பிரிவு தலைமை மருத்துவர் புனிதவதி அவர்கள் புற்று நோயினை ஆரம்பகாலத்திலேயே எப்படி கண்டறிவது பற்றி விழிப்புணர்வு மற்றும் அதற்க்கான சிகிச்சை வழிமுறைகளையும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார் .

மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா ஜெஸ்லின் பொதுமக்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துரைத்து , புற்றுநோய் இல்லா தென்காசி மாவட்டத்தினை உருவாக்குவதற்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை எப்போதும் தயாராகவும் அதற்க்கான முயற்சிகளை எப்போதும் மேற்கொண்டிருப்பதாக கூறினார் .

முகாமில் மருத்துவர்கள் கீதா, லதா , ஸ்வர்ணலதா , விஜயகுமார், கார்த்திக் அறிவுடை நம்பி, ஷெரின் ,நாகஜோதி , தீபிகா ஆகியோர் பொதுமக்களுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள் , இரத்தமாதிரிகள் அங்கேயே சேகரிக்கப்பட்டு அதற்க்கான முடிவுகளும் 10 நிமிடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது , மேற்கொண்டு சிகிச்சைக்கான வழிமுறைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது .மேலும் முகாமில் செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா , திருப்பதி , முத்துலட்சுமி , வசந்தி மற்றும் செவிலியர்கள் , மருந்தாளுனர்கள் , மற்ற பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் . உறைவிட மருத்துவர் ராஜேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்

Updated On: 25 Feb 2023 3:04 AM GMT

Related News