/* */

சாலைகளை சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் மனு

சாலைகளை சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கோரிக்கை மனு அளித்தார்.

HIGHLIGHTS

சாலைகளை சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் மனு
X

சாலைகளை சீரமைக்க கோரிசட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மனு வழங்கினர்.

தென்காசி மாவட்டம், கருவந்தா மற்றும் அச்சங்குட்டம் ஊராட்சியில் பழுதான தார் சாலையை புதுப்பிக்க கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரனிடம், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் கோரிக்கை மனுவினை அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனது தென்காசி தொகுதியில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருவந்தா கிராமத்தில் இருந்து ரதமுடையார்குளம் வரை செல்லும் தார் சாலை அச்சங்குட்டம் ஊராட்சியில் மாடர்ன் கோவில் முதல் வீ கே புதூர் செல்லும் சாலை மற்றும் யோவான் நாடார் கோவில் தெரு முதல் குறிச்சான் பட்டி செல்லும் சாலை பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து உள்ளது.

இதனால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு மிகவும் சிரமம் ஏற்படுவதால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன. ஆதலால் தாங்கள் போர்க்கால அடிப்படையில் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருவந்தா மற்றும் அச்சங்குட்டம் ஊராட்சியில் மேற்கண்ட பழுதான தார் சாலையை புதுப்பிக்க 25 சதவீதம் கனிமம் மற்றும் சுரங்க துறை நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏஜிஎம். கணேசன், காஜாமைதீன், தென்காசிமாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், நகர துணை தலைவர் தேவராஜன், பொருளாளர் ஈஸ்வரன், சுரண்டை பிரபாகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 May 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்