/* */

வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி

வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி
X

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி துவங்கியது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 5 தொகுதிகளில் மொத்தம் 1884 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த 5 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தென்காசி ஒருங்கிணைந்த வேளாண்மை கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. 5 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியை தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.

அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு இன்று முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. அந்தந்த தொகுதி தாலுகா அலுவலகத்திற்கு செல்லும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட இருக்கிறது.

Updated On: 6 March 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்