சங்கரன்கோவில்- தடுப்பூசி முகாமை எம்எல்ஏ ராஜா தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவிலில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமினை சட்டமன்ற உறுப்பினர் ராஜா தொடங்கி வைத்தார்
HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமினை சட்டமன்ற உறுப்பினர் ராஜா தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சங்கரன்கோவில் நகராட்சி மற்றும் வர்த்தக சங்கம் , பொது சுகாதார துறை இணைந்து 18 வயது முதல் 44 வரை உள்ள பொதுமக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி மருந்து முகாமினை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் சாந்தி தலைமை தாங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் ராஜா துவக்கி வைத்தார். மேற்கண்ட முகாமில் 18 வயது முதல் 44 வரை உள்ள பொதுமக்கள் சுமார் 250 நபர்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டு பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளைசுகாதார அலுவலர் பாலச்சந்தர் வட்டார மருத்துவ அலுவலர் இராஜரத்தினம், மருத்துவர் இராம் குமார், முத்துகணேஷ் சுகாதார ஆய்வாளர் மாதவராஜ் குமார் கருப்பசாமி தாலுகா வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.