/* */

அரசு இசைப் பள்ளியின் கட்டுமானப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சிவகங்கையில் கட்டப்பட்டு வரும் அரசு இசைப்பள்ளியின் கட்டுமானப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

அரசு இசைப் பள்ளியின் கட்டுமானப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

சிவகங்கை அருகே அமைக்கப்படும் அரசு இசைப்பள்ளியின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசு இசைப்பள்ளியின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலையும், பண்பாடும் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டவை. தமிழகத்தின் மரபுக் கலைகளையும், பண்பாட்டினையும் பாதுகாத்திடல் வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவும், இசைக்கலை, நாடகக் கலை, நாட்டியக் கலை, ஓவியக்கலை, சிற்பக் கலை ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு இசை மற்றும் கவின் கலைக் கல்வி பயிலகங்கள் வாயிலாக கொண்டு செல்லவும், இக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு கலைத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த கலை பண்பாட்டுத் துறை' என்ற ஒரு தனித்துறை டிசம்பர் திங்கள் 1991 -ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

பல்வேறு துறைகளின் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த அரசு சார்ந்த கலைகள் மற்றும் பொதுத்துறையின் கீழ் செயல்பட்டுவந்த தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டுவந்த தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு, தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் ஆகிய கலை அமைப்புகள் இத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டன. மேலும், கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த அரசு இசைப் பயிற்சி மையங்கள், தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்த அரசு கைத்தொழில் கல்லூரிகள் மற்றும் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி ஆகியன இத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், வாணியங்குடி ஊராட்சியில், பனங்காடி சாலையில் கலைபண்பாட்டுத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு இசைப்பள்ளியின் கட்டுமான பணித்தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் அரசு இசை பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டுவதற்க்கு அரசின் சார்பில் 2020 ஆம் ஆண்டு ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, வாணியங்குடி ஊராட்சியில் பனங்காடி சாலையில் சுமார் 75 சென்ட் நிலப்பரப்பில் மாவட்ட அரசு இசை பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு துறைகளுக்கு உரிய வகுப்பறைகள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கென மொத்தம் பத்து அறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகள் தொடர்பாக தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை, தரமான முறையில் நிறைவு பெற்று, பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, பொது பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் பெருமாள்சாமி மற்றும் இசைப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர்.தி.சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 7 Oct 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!