/* */

சிவகங்கையில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

கோஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ 66 லட்சம் என ஆட்சியர் ஆஷாஅஜித் தெரிவித்தார்

HIGHLIGHTS

சிவகங்கையில் கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்
X

சிவகங்கை கோஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி விற்பனையை தொடக்கி வைத்த ஆட்சியர் ஆஷா அஜித்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சிவகங்கை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், குத்துவிளக்கேற்றி வைத்து, சிறப்பு தள்ளுபடி விற்பனையினை தொடக்கி வைத்தார்

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: கோ-ஆப்டெக்ஸ் என, அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 88 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பானமுறையில் சேவை புரிந்து வருகிறது.

இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணம் ஆகும்.

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் பட்டு பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சிறப்பு தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளின் மென்பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்தமான இரகங்கள் தீபாவளி பண்டிக்கைக்காக தருவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப இரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை இரகங்கள் விற்பனைக்கு உள்ளது. காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், திருப்புவனம் பட்டு சேலைகள் மற்றும் கோயம்புத்தூர் மென்பட்டு சேலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.

மேலும், பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கிச் சேலைகள், கைத்தறி சுங்கடி சேலைகள், காஞ்சி காட்டன் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், சேலம் காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், திண்டுக்கல் காட்டன் சேலைகள் மற்றும் அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும், நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் சட்டைகள் லினன் மற்றும் பருத்தி சட்டைகள், லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மேலும், மகளிருக்காக சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப் பட்டுள்ளது.

அரசுத்துறையின் பணியாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் ஆகியோர் கைத்தறி ஆடைகளை வாங்கும் பொழுது உற்பத்தி திறன் அதிகரிக்கும். அதேபோல், பொதுமக்களும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தும் பொழுது, நெசவாளர்களின் வளர்ச்சி அதிக நிலையை எட்டும். தற்பொழுது தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்படும் ஆடைகளில் அந்த பணியாளர்கள் பெயர் மற்றும் முன்அனுபவம் குறித்த பதிவுகளும் வெளிவருகின்றன.

இதன்மூலம் ஆடை தயாரிப்பவருக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் பொருட்களின் தரம் குறித்தும் மக்கள் எளிதாக தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும். நம் ஒவ்வொருவரின் ஆதரவு கரமும்இ அவர்களின் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியாகும். எனவே, ஒவ்வொருவரும் கைத்தறி ஆடைகளை வாங்கி தனது பங்களிப்பு நெசவாளர் வளர்ச்சிக்காக இருந்திட வேண்டும்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டிற்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ரூ.32.03 இலட்சம் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு முழுவதுமாக ஏய்தப்பட்டது. 2023-2024 நடப்பாண்டில் சிவகங்கை விற்பனை மையத்திற்கு ரூ.60 இலட்சம் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கீடை விட அதிக அளவில் விற்பனை செய்து மாவட்டத்திற்கு பெருமை தேடி தர எல்லோரும் முன்வர வேண்டும்.மேலும், கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக என்ற இணையதளத்தில் மூலமும் பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வர்த்தக மேலாளர் கே.சங்கர் மேலாளார் (இரகம் மற்றும் பகிர்மானம்) ஆர்.மோகன்குமார், விற்பனையாளர் முல்லைக்கொடி மற்றும் கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Sep 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்