நீதிமன்றத்தில் கழுத்தறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நீதிமன்றத்தில் கழுத்தறுத்து இளைஞர் தற்கொலை முயற்சி
X

சிவகங்கையில் இளைஞர் ஒருவர் நீதிமன்றத்துக்குள் திடீரென நுழைந்து கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கையில் கடந்த 2015ம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட 14 வயது சிறுமி பாலியல் வழக்கில் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் புகார் தந்த பெண்ணே குற்றவாளி என தெரிய வந்தது. இதை தொடர்ந்து புகார் தந்த பெண் அவரது மகன் அசோக் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு 2015ம் ஆண்டு முதல் சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்தில் 5 ஆண்டாக நடந்து வந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது. மீண்டும் விசாரணை அடுத்த மாதம் 20 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட செல்வி என்பவரின் மகன் அசோக் நீதிமன்றத்துக்குள் திடீரென உள்ளே புகுந்து பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் தனது தாய் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி இன்று நீதிமன்றத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டதாகவும் போதை மாத்திரை போட்டு கொண்டதும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 25 March 2021 9:00 AM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...