/* */

சிவகங்கை, மானாமதுரை மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சிவகங்கை, மானாமதுரை மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
X
சிசிடிவி கண்காணிப்பில் வாக்கு இயந்திரங்கள்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட தேர்தல் சிறப்பு கண்காணிப்பாளர் தங்கவேல் பாதுகாப்பு குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். டிஎஸ்பி பால்பாண்டி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் பாதுகாப்பு விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட 4 நகராட்சிகளும் 11 பேர் ராசிகளுக்குமான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று 420 மதங்களில் நடைபெற்று முடிவடைந்தது. இங்கு 66.96 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் சிவகங்கை, மானாமதுரை நகராட்சி மற்றும் 3 பேரூராட்சிகள் வாக்கு எண்ணும் பணி சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும், திருப்பத்தூர் ஆறுமுகம் தீர்க்கமாக பள்ளியில் 3 பேராட்சிகளுக்கும் காரைக்குடி நகராட்சி மற்றும் 5 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் பணி காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், தேவகோட்டை நகராட்சி அங்குள்ள ஜான் பிரிட்டோ பள்ளியிலும் நடைபெற உள்ளது.

மேலும் இந்த நான்கு மையத்தில் ஸ்டிராங் ரூம் எனப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மகளிர் கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வருவதுடன், இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்கு எண்ணும் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

Updated On: 21 Feb 2022 8:04 AM GMT

Related News