/* */

சிவகங்கை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் : அமைச்சர் தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் 12,784 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ஆணையை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்  தொகை திட்டம் : அமைச்சர் தொடக்கம்
X

 சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட தனியார் மஹாலில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திட்டத்தை தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இரண்டாம் கட்ட நிகழ்வை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சரால் இரண்டாம் கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள, “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” விழாவினை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் 12784 குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உத்தரவினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொடக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள “கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்”படி, சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000-வழங்கும் நிகழ்வு, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட தனியார் மஹாலில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களின் நலன் கருதி தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு மக்கள் நலத்திட்டங் களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2021-ல் சட்டப்பேரவை தேர்தலின் போது பொது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதியினை நிறைவேற்றிடும் பொருட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் 85 சதவீதம் வாக்குறுதிகள் தற்போது வரை நிறைவேற்றப்பட்டு, சொன்னதை செய்யும் முதலமைச்சராகவும், சொல்லாத பல புதிய திட்டங்களையும் அறிவித்து சொல்லாததை செய்யும் முதலமைச்சராகவும், தமிழ்நாடு முதலமைச்சர் விளங்கி வருகிறார்கள்.

அதில், பெண்களின் பொருளாதாரம் முன்னேற்றத்தினை மேம்படுத்திடும் பொருட்டும், சமூகத்தில் ஆணுக்கு நிகராக பெண்கள் திகழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்குடனும் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.அந்த வகையில், பெண்கள் உயர்கல்வி கற்று பயன்பெற வேண்டும் என்ற சமூக சிந்தனையுடன் புதுமைப்பெண் என்ற திட்டத்தை அறிவித்து, மாதந்தோறும் உதவித் தொகைகள் மாணவியர்களுக்கு தற்போது, தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை தமிழகம் முழுவதும் செயல்படுத்திடும் பொருட்டு, 1 கோடியே 65 இலட்சம் குடும்ப தலைவிகளிடமிருந்து முதற்கட்டமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், தகுதியுடைய 10650000 குடும்ப தலைவிகளுக்கு முதற்கட்டமாக மாதம் ரூ.1000-வழங்கும் நிகழ்வினை, தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 15.09.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடக்கி வைத்தார்.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கெனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வினையும், இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

அந்நிகழ்ச்சியின் மூலம், நேரலை காட்சியின் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் , தங்களிடையே இத்திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 12784 மகளிர்களுக்கு உரிமைத் தொகை வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில்,முதல் கட்டமாக 225113 மகளிர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை தொடர்ந்து, மாவட்டத்தில் மொத்தம் 237897 மகளிர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதுதவிர, 66700 மகளிர்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித்தொகையும் பெற்று வருவது குறிப்பிடதக்கதாகும். இதன் வாயிலாக, சராசரியாக 75 சதவீதம் மகளிர்கள் அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

பெண்களின் முன்னேற்றத்திற்கென தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகள் அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ.பால்துரை, முன்னாள் அமைச்சர் தென்னவன், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, சிங்கம்புணரி பேரூராட்சித்தலைவர் த.அம்பலமுத்து,, துணைத் தலைவர் இந்தியன்செந்தில், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் செ.ரம்யா, உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Nov 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?