/* */

சார்பதிவாளர் பதிவு எல்லைகள் வரையறை: மே 25 -ல் சிவகங்கையில் கருத்து கேட்புக் கூட்டம்

சார்பதிவாளர் அலுவலக கிராம எல்லைகளை சீரமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது

HIGHLIGHTS

சார்பதிவாளர் பதிவு எல்லைகள் வரையறை: மே 25 -ல் சிவகங்கையில் கருத்து கேட்புக் கூட்டம்
X

சார்பதிவாளர் அலுவலக கிராம எல்லைகளை சீரமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் வரும் 25: ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை வருவாய் வட்ட தலைமையிடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைமையிடம் அடிப்படையில், சார்பதிவாளர் அலுவலக நிர்வாக எல்லைக்குட்பட்ட கிராமங்களை மறுசீரமைத்தல் தொடர்பாக, பதிவுத்துறை தலைவருக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மற்றும் காரைக்குடி பதிவு மாவட்டங்களைப் பொறுத்து அனைத்து சார்பதிவாளர்களிடமிருந்தும், பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் வருவாய் வட்ட தலைமையிடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைமையிடம் அடிப்படையில் அவற்றோடு இணைக்கப்பட வேண்டிய வழிகாட்டி கிராமங்களின் விவரங்களைப் பொருத்து, சார்பதிவாளர் அலுவலக கிராம எல்லைகளை சீரமைப்பது தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 25.05.2022 அன்று முற்பகல் 10.30 மணியளவில் பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டமானது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

மேலும், சீரமைப்பிற்கு உட்புகுத்தப்படும் வழிகாட்டி கிராமங்களின் விவரங்கள் துணைப்பதிவுத்துறைத் லைவர் அலுவலகம், சிவகங்கை மற்றும் காரைக்குடி மாவட்டப்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களின் விளம்பரப்பலகைகளில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இக்கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

Updated On: 12 May 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்