/* */

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு முகாம்

சிறப்பு முகாம்களில், மாற்றுத்திறனாளிகளுக் கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு செய்யப்படும்

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு முகாம்
X

பைல் படம்

சிவகங்கை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் வருகின்ற ஜனவரி'2023 மற்றும் பிப்ரவரி'2023 ஆகிய மாதங்களில் வட்டாரந்தோறும் நடத்தப்பட உள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனமாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தகவல் தெரிவித்தார்.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்திடவும், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் ஒற்றைச்சாளர முறையில் வருகின்ற ஜனவரி 2023 மற்றும் பிப்ரவரி 2023 ஆகிய மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அனைத்து வட்டார அளவிலும் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, முதலில் 03.01.2023 அன்று திருப்புவனம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், 06.01.2023 அன்று மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 10.01.2023 அன்று இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 12.01.2023 அன்று காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 13.01.2023 அன்று கண்ணங்குடி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும்.

20.01.2023 அன்று தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 24.01.2023 அன்று சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 27.01.2023 அன்று கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 31.01.2023 அன்று எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 01.02.2023 அன்று சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 03.02.2023 அன்று திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 08.02.2023 அன்று சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

இச்சிறப்பு முகாம்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, பிற துறைகளின் மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை, வங்கிக் கடனுதவி வழங்கிட நடவடிக்கை, வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளல், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் பராமரிப்பு உதவித் தொகை வழங்கிட நடவடிக்கை, வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை, 18 வயது குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறையின் மூலம் உதவித்தொகை வழங்கிட நடவடிக்கை ஆகியவைகள் மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, வங்கிக்கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும், இச்சிறப்பு முகாம்களில் 8 மார்பளவு புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல்களுடன் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Dec 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...