/* */

சேலத்தில் லாரியில் கடத்த முயன்ற 17 டன் ரேசன் அரிசி பறிமுதல்

சேலத்தில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற, 17 டன் ரேசன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சேலத்தில் லாரியில் கடத்த முயன்ற  17 டன் ரேசன் அரிசி பறிமுதல்
X

மாதிரிப்படம்

சேலத்தில் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கொண்டலாம்பட்டி பகுதியில் வாகன தணிகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி மற்றும் அதனை பின் தொடர்ந்து வந்த மூன்று சிறிய ரக சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது, வாகனத்தில் வந்த சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கினார். இதனையடுத்து வாகனங்களில் சோதனை நடத்தியபோது, அவற்றில் ரேசன் அரசி இருப்பதை உறுதி செய்தனர். 17 டன் அளவுக்கு இருந்த ரேசன் அரிசியையும், 4 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தலுக்கு காரணமாக இருந்த சேலம் மணியனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ரேசன் அரிசி மூட்டைகள் அனைத்தும் கர்நாடக மாநிலத்திற்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இந்த கடத்தலில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள கோபிநாத் என்பவரை தேடி வருகின்றனர்.

Updated On: 29 April 2021 2:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...