/* */

சேலம் நள்ளிரவு கொலைவெறி தாக்குதல் சம்பவம்: மேலும் 10 பேர் கைது

சேலத்தில் நடந்த நள்ளிரவு தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

சேலம் நள்ளிரவு கொலைவெறி தாக்குதல் சம்பவம்: மேலும் 10 பேர் கைது
X

சேலம் மாநகர் கிச்சிப்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.எம்.சி காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்லதுரையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த 20 பேர் சேர்ந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் செல்லதுரையின் ஆதரவாளர்கள் கடந்த திங்கள் கிழமை இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் 15க்கும் மேற்பட்டோர் செல்லதுரையின் ஆதரவாளர்கள் சிலரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த நான்கு பேர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கொலையாளிகள் கத்தி, வீச்சரிவாளை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து சாலையில் ரத்தவெள்ளத்தில் கிடந்த மணிகண்டன், பிரதாப், வினோத் மற்றும் 17 வயது சிறுவன் உதயகுமார் ஆகிய 4 பேரையும் அப்பகுதியினர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வினோத்(25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில் கிச்சிப்பாளையம் போலீசார் கத்தி மற்றும் வீச்சருவாலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை தேடி வந்தனர்.

தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்தபோது முன்விரோதம் காரணமாக ரவுடி செல்லதுரையின் ஆதரவாளர்களையும் கொலை செய்யும் நோக்கில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் மேகலாவின் கணவர் பழனிச்சாமி ஆதரவாளர்கள் தான் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி கத்தி மற்றும் வீச்சரிவாள் வெட்டியதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே கடந்த திங்கட்கிழமை இரவு சங்ககிரி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த சதாம் உசேன், விஜி, சஞ்சய், கமல், நந்தகுமார், மாதவன் ஆகிய 6 பேரை சங்ககிரி டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து கிச்சிப்பாளையம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மேகலாவின் கணவர் பழனிச்சாமி உட்பட 4 பேரை கிச்சிபாளையம் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் முன்விரோதம் காரணமாகத்தான் இந்த தாக்குதல் நடைபெற்றது என்பது தெரியவந்ததை அடுத்து, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் மேகலாவின் கணவர் பழனிச்சாமி உட்பட பத்து பேரை புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து நேற்று இரவு இந்த கொலை வழக்கில் தொடர்புடைய கிச்சிபாளையம் எஸ் எம் சி காலனி பகுதியை சேர்ந்த மதன், பிரபு, என்கின்ற கோல், பூவரசன், சுரேஷ் புகழேந்தி, சுந்தர், விஜய், அர்ஜுனன், விஸ்வநாதன், மற்றும் 15 வயது சிறுவன் உள்ளிட்ட மேலும் 10 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கொலை சம்பவத்தில் 10 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, 10 பேரையும் ஜேஎம் 2 நீதிபதி பொறுப்பில் இருக்கும் நீதிபதி கலைவாணி முன் ஆஜர்படுத்தினர். அவர்களை 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 15 வயது சிறுவன் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார்.

முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் இதில் தொடர்புடையதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கிச்சிப்பாளையம் பகுதியில் இதுபோன்ற முன்விரோத தாக்குதல் மற்றும் உயிரிழப்புகள் பல ஆண்டு காலமாக தொடர்கதையாகவே உள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் பிரபல ரவுடி செல்லதுரை படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து செல்லதுரையின் ஆதரவாளர்கள் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த கொலையில் தொடர்புடைய நபர்களின் ஆதரவாளர்களே மீண்டும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 10 Sep 2021 7:13 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்