/* */

சேலம் மாவட்டம்; மக்கள் நீதிமன்றங்களில் 3,832 வழக்குகளுக்கு தீர்வு

Salem News,Salem News Today-சேலம் உள்பட 5 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 3,832 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டம்; மக்கள் நீதிமன்றங்களில் 3,832 வழக்குகளுக்கு தீர்வு
X

Salem News,Salem News Today-- சேலம் உள்பட 5 இடங்களில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 3,832 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. (கோப்பு படம்)

மக்கள் நீதிமன்றம்

Salem News,Salem News Today -சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான தங்கராஜ், முதலாவது முன்சீப் மாவட்ட நீதிபதி சதீஸ்குமார், 2-வது முன்சீப் மாவட்ட நீதிபதி தீனதயாளன், குடும்ப நல கோர்ட் நீதிபதி ஜெயஸ்ரீ, சார்பு நீதிபதி ரேணுகாதேவி உள்பட நீதிபதிகள், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்கள், மூத்த வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து 7 பெஞ்ச் அமைக்கப்பட்டு அங்கு சமரசம் செய்து கொள்ளும் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்கு, வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப வழக்கு, உரிமையியல் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 7,459 வழக்குகள் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. முடிவில், 3,832 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதன்மூலம் ரூ.20 கோடியே 24 லட்சம் தொகை பைசல் செய்யப்பட்டது.

ரூ.14 லட்சம் இழப்பீடு

சேலம் மாவட்டம், ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 49). இவர், பட்டு நெசவு தறி தொழில் செய்து வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் 25-ந் தேதி ஆர்.பெத்தாம்பட்டி பிரிவு ரோட்டில் நின்றபோது, திருச்செங்கோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் துரைசாமி உயிரிழந்தார். இதனால், அவரது மனைவி சுமதி மற்றும் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சேலம் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்து துரைசாமியின் குடும்பத்தினருக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இழப்பீடு தொகைக்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, மோட்டார் வாகன விபத்து கோர்ட் நீதிபதி தாண்டவன் ஆகியோர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

சங்ககிரி-ஆத்தூர்

இதேபோல், சங்ககிரி தேவகவுண்டனூரை சேர்ந்த பழனிசாமி (51) என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. முடிவில், இறந்த பழனிசாமியின் குடும்பத்தினருக்கு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கியது.

சேலத்தை தொடர்ந்து சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் மற்றும் ஓமலூரில் உள்ள கோர்ட்களிலும் நேற்று நீதிபதிகள் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

Updated On: 14 May 2023 7:16 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை