/* */

சேலம் மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

சேலம் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்
X

மாவட்ட ஆட்சியர்  கார்மேகம்.

சேலம் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் அறிக்கையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருகின்ற நாளை (08.10.2022) பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அக்டோபர் 2022 பாதம் இரண்டாவது சனிக்கிழமை (08.10.2022 அன்று ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து குறை நிவர்த்தி பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக ஆன்லைன் பதிவுகளை அந்தந்த வட்ட அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளலாம். கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு தேவைப்படின் அவற்றையும் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன்படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை இம்முகாமில் அளித்து பயனடையலாம்.

இக்குறைதீர் முகாமில் பங்குபெறும் பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்குமாறும் அதாவது, முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி உபயோகத்தில் உள்ளதை அலுவலர்களால் உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூட உத்தரவு..

மிலாது நபியை முன்னிட்டு வருகின்ற 09.10.2022, ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்பஎல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்காணும் நாளில் இதனை மீறி மதுபான விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Oct 2022 1:18 PM GMT

Related News