/* */

சேலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள்பாதிப்பு: நடவடிக்கை தேவை

unannounced power cut-அறிவிக்கப்படாத மின்வெட்டால் சேலத்தில் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

சேலத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால்  பொதுமக்கள்பாதிப்பு: நடவடிக்கை தேவை
X

unannounced power cut-மின் நிறுத்த மாதிரி படம்.

unannounced power cut-சேலத்தில் கடந்த சில நாட்களாகவே எந்தவித அறிவிப்பும் இன்றி காலை முதல் இரவு வரை தொடர்ந்து சில நேரங்களுக்கு மின்தடை ஏற்படுவதால் மின்சாரத்தினை நம்பி தொழில்செய்வோர்,குடும்ப பெண்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், வீடுகளிலேயே கம்ப்யூட்டர் மூலம் வேலை செய்வோர் என பலதரப்பினரும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.

மின்மிகு மாநிலம்

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மின்மிகு மாநிலமாக மாறிவிட்டது என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆட்சியாளர்களும் இதே கருத்தினைத்தான்தெரிவித்தனர். இருந்த போதிலும் அவ்வப்போது கரண்ட் கட்ஆகி வந்தது. சேலம் மாநகரைப்பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே எந்தவித முன்அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பல தரப்பினரும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.இதுபோல் அடிக்கடி மின்வெட்டுஏற்படும் நிலையில் எப்படி மின் மிகு மாநிலமாக இருக்கும் என பொதுமக்கள் கேள்விஎழுப்புகின்றனர்.

பொதுமக்களுக்கு மாதந்தோறும் செய்யப்படும் பராமரிப்பு பணிகளுக்கான மின்நிறுத்தமானது செய்தியாக வெளியிடப்படுகிறது- இதனால் மின் இணைப்பு பெற்றவரின்மொபைலுக்கு இந்த விஷயம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. அதைப்பற்றி பிரச்னையில்லை. அந்த நாள் முழுவதும் மின்சாரம் இருக்காது என்பதால் அதற்கான முன் நடவடிக்கையினை பொதுமக்கள் மேற்கொண்டுவிடுகின்றனர்.

ஆனால் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரைமணிநேரம், ஒரு மணிநேரம், 10 நிமிஷம், 20 நிமிஷம், என மின்வெட்டு மாறி மாறி ஏற்படுவதால் குடும்ப பெண்கள் முதல் மின்சாரத்தினை நம்பி வேலைசெய்பவர்களின் கதி அதோ கதியாகிவிடுகிறது. அதுவும் வீடுகளில் ஒர்க்பிரம் ஹோம் செய்வோரின் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்குரியது. பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதோடு நிறுவனத்திற்கும் பதில் சொல்ல இயலாத நிலையில் பரிதவித்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்பது யாருக்கும் தெரிவதில்லை. அதிகாரிகளும் உரிய முறையில் அறிவிப்பது இல்லை.

தற்போது பள்ளி, கல்லுாரிகள் தொடர்ந்து இயங்கி வருவதால் காலை நேரத்தில் திடீர் என அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் பலர் அதிர்ச்சியடைய வேண்டிய நிலையே ஏற்படுகிறது. கரண்டை நம்பி அன்று தயாரிக்கப்படும் மெனு அதோ கதிதான் .அதேபோல் ஒருசிலர் கிளம்புவதற்கு முன்னர்தான் அயர்னிங் செய்வர். அவர்கள் நிலையும் கடும் மோசமாகி விடுகிறது. இதனால் காலை நேரத்தில் குடும்ப பெண்கள் முதல் மாணவ, மாணவிகள் வரை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையே தொடர்ந்து ஏற்படுகிறது.

அதிகாரிகள் நடவடிக்கை தேவை

மின்வாரிய அதிகாரிகள் இதுபோல் திடீர் திடீரென மின்நிறுத்தம் செய்யப்படுவதனை தவிர்க்கவேண்டும் . மழை, இடி ஆகிய காலங்களில் செய்வது வேறு. ஆனால் எந்தவிதஅறிவிப்பும்இல்லாமல் திடீரென சிறிது நேரம் சப்ளை தருவது, பின்னர் மீண்டும் ஆஃப் செய்வது போன்ற பிரச்னையால் பல தரப்பினரும் பாதிப்படைகின்றனர்.அதுவும் நெசவுத்தொழில் செய்வோரின் நிலைதான் மேலும்பரிதாபத்துக்குரியது.

மின்கட்டண உயர்வு

ஏற்கனவே தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வினால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் பொதுமக்கள். இந்நிலையில் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் கரண்ட் கட்செய்தால் பொதுமக்கள் பெரும் நஷ்டமடைகின்றனர் . எனவே சம்பந்தப்பட்ட அரசு மின்கட்டண உயர்வினை திரும்ப பெறவேண்டும், அதேபோல் மின்வாரிய அதிகாரிகள் இனியாவது அறிவிக்கப்படாமல் மின்நிறுத்தம் செய்வதைத் தவிர்க்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக மின்கட்டண உயர்வைகண்டித்து மாநிலம் முழுவதும் வரும் 25 ந்தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தற்போதுஇடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இபிஎஸ் அறிவித்துள்ளார். அதேபோல் பாஜ சார்பில் மின்கட்டண உயர்வினை தமிழக அரசு வாபஸ் பெறவேண்டும் என மாநிலம் முழுவதும் வரும் 23 ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும், அப்படியும் அரசு திரும்ப பெறாத பட்சத்தில் மின்வாரிய ஆபீஸ்களின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகவும் மாநில தலைவர் அண்ணாமலை சேலத்தில் பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

Updated On: 21 July 2022 1:09 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்