/* */

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாயாஜால வெற்றி- எடப்பாடி பழனிசாமி

தில்லுமுல்லு செய்து நகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக சேலத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாயாஜால வெற்றி- எடப்பாடி பழனிசாமி
X

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அதிமுக இணை ஒதுங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கண்டன ஆர்பாட்ட உரை நிகழ்த்தினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அதிமுக இணை ஒதுங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு கண்டன ஆர்பாட்ட உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் பேசும் போது, சென்னையில் 49 ஆவது வார்டில் திமுகவை சேர்ந்த நரேஷ்குமார் என்பவர் கள்ள ஓட்டு போட முயற்சித்தபோது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொண்டர்களோடு அவரை பிடித்து ஜனநாயக முறைப்படி தன் கடமையை செய்தார். காவல்துறை செய்ய வேண்டிய வேலையை ஜெயக்குமார் செய்தார்.

குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவரை கையும் களவுமாக காவல்துறையிடம் ஒப்படைத்த அவருக்கு, இன்று பரிசாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறது. திமுக அரசு என்று பேசிய எடப்பாடி பழனிசாமி, நரேஷ் குமார் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனையும் அபராதமும் கட்டியுள்ளார்.

நரேஷ் குமார் மீது போடப்பட்ட வழக்குகளின் விவரங்களை சுட்டிக்காட்டிய ஈபிஎஸ், பல வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளது என்றார். பல்வேறு குற்றச் சம்பவங்கள் ஈடுபட்டவர் வெளியில் சுதந்திரமாக சுற்றி வருகிறார். நரேஷ் குமாரை கைது செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை அரங்கேறியிருக்காது என்றார்.

தமிழகத்தில் அதிமுக மீது மக்கள் அதிக பற்று வைத்து இருந்ததை தெரிந்து கொண்ட திமுகவினர் தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு செய்து கள்ள ஓட்டு மூலமே வெற்றி பெற்றுள்ளது.ஜனநாயக முறைப்படி திமுக வெற்றி பெறவில்லை.

வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு செய்து, முறைகேடு செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.மக்கள் வாக்களித்து வெற்றி பெறவில்லை. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்காளருக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை திமுக பணம் கொடுத்து உள்ளனர். அரிசி பாத்திரம் மற்றும் தங்க காசு போன்றவையும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.

நான் முதல் அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது.தேர்தல் ஆணையம் இது போன்ற முறைகேடுகளை தடுக்கவே போட்டோ போட்டு அடையாள அட்டை வழங்கியது. ஆனால் அதையும் மீறி இதுபோன்ற முறை கேடுகளில் திமுக ஈடுபட்டுள்ளது.

சென்னையில் வாக்குப்பதிவின் போது மக்கள் பயந்து வாக்களிக்க வரவில்லை. வாக்கு எந்திரத்தில் எந்த பொத்தான் அழுத்தினாலும் திமுகவுக்கு வாக்களிக்கும் வகையில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் 100 சதவீதம் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்றார். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தும் ஒரே கட்சி அதிமுக என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, திருடன் மீது வழக்கு போடாமல், திருடனைப் பிடித்து கொடுப்பவர் மீது வழக்குப் போடும் அரசாக திமுக உள்ளது.குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

திமுக அரசில் குற்றம் செய்பவர்களுக்கு ராஜமரியாதை நடத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். அதிமுகவை ஒழிக்க நினைச்சால் எதிர்காலத்தில் உங்கள் கட்சி காணாமல் போய்விடும் என்ற அவர், சிறை செல்வது எங்களுக்கு புதிதல்ல. நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சியாக அதிமுக என்றும் உள்ளது.முதல்வர் ஸ்டாலின் ஒரு விளம்பர பிரியர்.விளம்பரத்திற்காக ஆட்சி செய்து வருகிறார். 9 மாத ஆட்சி காலத்தில் புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை.அதிமுக ஆட்சி காலத்தில் சேலத்தில் திரும்பும் இடமெல்லாம் பாலங்கள் அமைத்தோம். குடிநீர், தெருவிளக்கு, பல்வேறு திட்டங்களை பூர்த்தி செய்து கொடுத்தோம்.

ஏழை மக்களுக்கு நன்மை செய்யும் அம்மா மினி கிளினிக் போன்ற திட்டங்களை மூடுகின்ற அரசாக திமுக உள்ளது என்று பேசினார். ஒருபோதும் அதிமுகவை இது போன்ற வழக்குகளால் அழித்துவிட முடியாது என்றும் அவ்வாறு அச்சுறுத்தினால், திமுக காணாமல் போகும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

Updated On: 28 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்