/* */

சேலம் மாவட்ட ஆடவர் பூப்பந்தாட்டப் போட்டி மோதிலால் பூப்பந்து குழு முதலிடம் பெற்று சாதனை

dist level badminton salem motilal team first place ஆத்துாரில் நடந்த சேலம் மாவட்ட ஆடவர் பூப்பந்தாட்டப்போட்டியில் 11 அணிகள் விளையாடியது. சேலம் மோதிலால் பூப்பந்தாட்ட குழுவானது முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. .

HIGHLIGHTS

சேலம் மாவட்ட ஆடவர் பூப்பந்தாட்டப் போட்டி  மோதிலால் பூப்பந்து குழு முதலிடம் பெற்று சாதனை
X

பேட்மிண்டன்  மைதானத்தில் விளையாடுவது போன்ற மாதிரிப்படம் 

dist level badminton salem motilal team first place

சேலம் மாவட்ட ஆடவர் பூப்பந்தாட்டப் போட்டியில் சேலம் மோதிலால் பூப்பந்து குழு முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.ஆத்துார் அங்குநகர் விளையாட்டுத்திடலில் சேலம் மாவட்டஆடவர் ஐவர் பூப்பந்து பட்டய போட்டியும், மகளிருக்கான தேர்வுத்திறன் போட்டியும் நடந்தது.

ஆடவர் பிரிவில் 11 அணிகள் பங்கு பெற்றன. அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 1, சேலம் மாஞ்சோலை பூப்பந்து குழு 2.சேலம் குகை பூப்பந்து குழு,3.சேலம் எம்டிஎம் பூப்பந்து குழு,4.ஆத்துார் நண்பர்கள் பூப்பந்து குழு,5.சேலம் மோதிலால் பூப்பந்து குழு''பி'', ஆகிய ஐந்து அணிகள் ஒரு பிரிவாகவும், 1,ஏத்தாப்பூர்பூப்பந்துகுழு 2,இளம்பிள்ளை பூப்பந்து குழு, 3,ஆத்துார் பூப்பந்துகுழு, 4,சேலம் அரசன் பூப்பந்து குழு, 5,சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் ,6.சேலம் மோதிலால் பூப்பந்து குழு''ஏ''ஆகிய ஆறு அணிகள் மற்றொரு பிரிவாகவும் விளையாடினர்.முதல் பிரிவில் அரையிறுதிப்போட்டியில் சேலம் எம்டிஎம் அணியும், சேலம் மோதிலால் பி அணியும் விளையாடியதில் எம்டிஎம் பூப்பந்து குழு வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு பிரிவில் சேலம் மோதிலால் ''ஏ''அணியும்இளம்பிள்ளை பூப்பந்து குழுவும் விளையாடி அதில் மோதிலால் ''ஏ''அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் மோதிலால் ''ஏ''அணியானது எம்டிஎம் அணியுடன் விளையாடி முதலிடம் பெற்று சாதனை படைத்தது.இறுதிப்போட்டியில் விளையாடிய சேலம் மோதிலால் குழுகுருஅவர்களுக்கும், எம்டிஎம் அணியில் விளையாடிய ஹீமாயூன் அவர்களுக்கும் ஆத்துார் கோல்டன் பூப்பந்துகுழுவின் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

dist level badminton salem motilal team first place


ஆத்துாரில் நடந்த மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டியில் சேலம் மோதிலால் பூப்பந்து குழு முதலிடம்பெற்று சாதனை படைத்து கோப்பையை வென்றது.

dist level badminton salem motilal team first place

பரிசளிப்பு விழாவில் ஆத்துார் நகரமன்ற உறுப்பினர் சம்பத்குமார் பங்கேற்று முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முதலிடம் பெற்ற மோதிலால் அணிக்கு சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. இப்போட்டியின் மூலம் சேலம் மாவட்டத்தின் சார்பில் விளையாட ஆடவர் அணி ஒன்றும் மகளிர் அணி ஒன்றும் தேர்வு செய்யப்பட்டது. இவர்கள் டிசம்பர் மாதம் 10 மற்றும் 11ந்தேதிகளில் திருநெல்வேலியில் நடைபெறும் தமிழ்நாடு பூப்பந்து கழகம் சார்பில் நடைபெறும் பட்டய போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

மேற்படி பரிசளிப்பு விழாவில் சேலம் மாவட்ட பூப்பந்து கழகத்தின் தலைவர் துரைசாமி, செயலாளர் ரமேஷ்குமார், உதவித்தலைவர் சுப்பிரமணியன் சாதிக்அலி, உதவி செயலாளர்கள் கோபி, சுரேஷ், மாவட்ட கழகத்தின் புரவலர் குமாரசாமி, மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.இப்போட்டியினை ஆத்துார் பூப்பந்து குழு, நண்பர்கள் பூப்பந்துகுழு, ஸ்டார் பூப்பந்து குழு, மற்றும் மரியா பூப்பந்து குழு, ஆகிய நான்கு குழுக்களும் இணைந்து மிக மிக சிறப்பாக நடத்தினர். இதுபோல் பூப்பந்தாட்டப்போட்டிகள் வருங்காலத்திலும் மிகவும் சிறப்பாக நடத்தப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Updated On: 23 Nov 2022 6:12 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...