/* */

எடப்பாடி, சங்ககிரி கொரோனா நோயாளிகளுக்கு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து அன்னதானம்!

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் அன்னதான திட்டத்தின் கீழ் தயாரான உணவுகள், எடப்பாடி மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

எடப்பாடி, சங்ககிரி கொரோனா நோயாளிகளுக்கு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து அன்னதானம்!
X

அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்குவதற்காக, எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் தயாராகும் உணவுப் பொட்டலங்கள்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் அன்னதான திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று முழு ஊரடங்கால், அனைத்து கோவில்களும் மூடப்பட்டு கோவில் ஊழியர்கள் மட்டுமே கோவில் வளாகத்தில் உள்ளனர்.

இதனால் அன்னதானத் திட்டத்தின் மூலம் சமைக்கப்படும் மதிய உணவை, தூய்மைப் பணியாளர்கள், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு வழங்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி எடப்பாடி அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் அன்னதானத் திட்டத்தின் கீழ் சமைக்கப்படும் உணவுகளை, எடப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை, எடப்பாடி நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு வழங்குமாறு, நஞ்சுண்டேஸ்வர் கோவில் செயல் அலுவலர் கோகிலா உத்தரவிட்டார்.

இதையடுத்து, எடப்பாடி அரசு மருத்துவமனையில் 200 நபர்களுக்கும், சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு 250 நபர்களுக்கும், எடப்பாடி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 50 பேருக்கும் என, மொத்தம் 500 பேருக்கு மதிய உணவு, கோவில் ஊழியர்களால் தயாரிக்கப்பட்டு தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 1 Jun 2021 6:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  4. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  5. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  6. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  7. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  8. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  9. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  10. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை