/* */

பணம், நகைகளை கொள்ளையடித்த 3 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த 3 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பணம், நகைகளை கொள்ளையடித்த 3 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
X

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மூவர்.

சேலம், தாதகாப்பட்டி ஸ்ரீரங்கம் பகுதியில் 5வது தெருவில் வசித்து வருபவர் சேகர். இவரது மகன் பால்ராஜ் (27). கடந்த 8ம் தேதி மூலப்பிள்ளையார் கோவில் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி மாதேஷ் (26) அவரை வழிமறித்தார். பின்னர். கத்தி முனையில் பால்ராஜ் கழுத்திலிருந்த 3 சவரன் தங்கச் செயின் மற்றும் ரூ.2,700 பறித்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள், மாதேசை பிடிக்க முயன்றபோது கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகார் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மாதேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதேபோல் சேலம் லைன்மேடு புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணி (45). கார் டிரைவரான இவர், கடந்த 10ம் தேதி டூவீலரில் தாதகப்பட்டி மேட்டு தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த, தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு அம்மன் நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பிச்ச கார்த்தி (24), கத்தியை காட்சி மிரட்டி மணியிடம் இருந்து 2 பவுன் சங்கிலி, ரூ.2175 பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோல், சேலம் லைன்மேடு வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (54). இவர் கடந்த 6-ந் தேதி சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகர் ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி விஜய் (36), கத்தி முனையில் மிரட்டி சீனிவாசனிடம் இருந்து இரண்டேகால் சவரன் சங்கிலி மற்றும் ரூ.4,300 பறித்துக் கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ரவுடிகள் 3 பேரும், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால், இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதன் பேரில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா, ரவுடிகள் பிச்ச கார்த்தி, மாதேஷ், விஜய் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து உத்தரவிட்டார்.

Updated On: 25 Dec 2022 8:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா