தேர்தல் பார்வையாளரிடம் புகார் தெரிவிக்க மொபைல் எண் வெளியீடு

இராணிப்பேட்டை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பற்றிய புகார் அளிக்க தேர்தல் பார்வையாளர் மொபைல் எண் வெளியிடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தேர்தல் பார்வையாளரிடம் புகார் தெரிவிக்க  மொபைல் எண் வெளியீடு
X

இராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்து வரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளின் பார்வையாளராக சாந்தாவை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதனைத்தொடர்ந்து அவர், மாவட்டத்தில் அனைத்து வாக்கு மையங்கள், வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வுநடத்தி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிவருகிறார் .

இந்நிலையில், மாவட்ட ஆட்சித்தலைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் கூறுகையில், மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறி வெற்றி பெறும் நோக்கில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் மற்றும் அனைத்து விதமான தேர்தல் குறித்த புகாரினை நேரடியாக பொதுமக்கள், தேர்தல் பார்வையாளரிடம் 9363105413 என்ற கைக்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும், நேரடியாகவும் எந்த நேரத்திலும் அவரிடம் தெரிவிக்கலாம்.

வேட்பாளர்கள், முகவர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் அனைவரும் தேர்தல் குறித்த புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Sep 2021 4:23 AM GMT

Related News