/* */

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன்பலத்த மழை .

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென இடியுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

HIGHLIGHTS

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடியுடன்பலத்த மழை .
X

மழை கோப்பு காட்சி.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் தாக்கம் இருந்து வந்தது. வறட்சி ஏற்பட்டு நிலங்களில் பயிரிட்டவைகள் காய்ந்து வந்ததைக்கண்டு விவசாயிகள் சோகத்தில் இருந்து வந்தனர். அதேபோல் பொதுமக்களும் வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட புழுக்கம் காரணமாக மிகுந்த அவதிக்குள்ளாகி வந்துள்ளனர் .

இந்நிலையில் நேற்று நள்ளிரவு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. அரக்கோணம்10.4 மிமீ, ஆற்காடு 56 மிமீ, காவேரிப்பாக்கம்,32 மிமீ, சோளிங்கர் 48 மிமீ, வாலாஜா 87.8 மிமீ, அம்மூர் 36 மிமீ மற்றும் கலவையில் 8.2 மிமீ என சராசரியாக 39.7 மி.மீ அளவிற்கு பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பலத்த இடியுடன் கூடிய மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இன்று காலை 10 மணியளவில் தான் மின்விநியோகம் சீரானது.

இதனால் மகிழ்ச்சியடைந்த மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மானாவாரிப பயிரினை சாகுபடி செய்ய எதுவாக உள்ளதாகவும் அதேப்போல காய்ந்த நிலையிலுள்ள பயிரினங்கள் துளிர் விட தற்போது பெய்த மழை பெரும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் கூறினர்.

Updated On: 1 July 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!