/* */

எஸ்பி.,அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

எஸ்பி.,அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
X

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நில மோசடி புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாதிக்கப்பட்டவர் கை குழந்தைகளுடன் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டையை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா (35), இவரது அண்ணன் ரமேஷ் (38), ரமேஷின் தந்தை, தாய், மனைவி,இரண்டு கை குழந்தைகள் மற்றும் உறவினர்களுடனும், புகார் மனுவுடன் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி., அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அவர்கள் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது,வாலாஜாப்பேட்டையை அடுத்த வன்னிவேடு கிராமத்தில் கண்ணப்பநாயக்கர் என்பவருக்கு சொந்தமான சர்வே எண் 774 என்ற நிலத்தை அவரது வாரிசுகளான சுகுணா, டில்லி பாலாஜி, சாந்தி மற்றும் ராணி ஆகியோருக்கு பாகப்பிரிவினை மூலம் பெற்ற நிலத்தை மேற்கண்ட நான்கு பேரும் சேர்ந்து செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு கடந்த 2015 ம் ஆண்டு சொத்தை விற்று கிரையம் செய்துகொடுத்துள்ளனர்.

இதையடுத்து தனக்கு சொந்தமான மேற்படி நிலத்தை ரமேஷ் தனது உடன்பிறந்த சகோதரி வெண்ணிலாவுக்கு கடந்த 2019 ல் தான செட்டில் மெண்ட் செய்து பொது அதிகாரம் வழங்கியுள்ளார். தொடர்ந்து அண்ணன் மூலம் கிடைத்த சொத்தை பாதுகாக்க வெண்ணிலா ரூ.10 லட்சம் செலவில் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வருகிறார்.இந்த சூழலில் மேற்படி சொத்தை ரமேஷ் மற்றும் அவரது தங்கை வெண்ணிலா தரப்புக்கு தெரியாமல் பெங்களுரூவை சேர்ந்த வீராசாமி என்பவர் போலி ஆவணங்கள் மூலம் வாலாஜாப்பேட்டையை சேர்ந்த அப்துல்ரபிக் என்பவருக்கு கடந்த 2016 ல் சொத்தை விற்கும் (பவர் ) அதிகாரத்தை தந்து மோசடியாக விற்க முயற்சி செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ரமேஷ்,வெண்ணிலா ஆகியோர் வாலாஜா சார்பதிவாளரிடம் முறையிட்டும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக வாலாஜாப்பேட்டை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து தீ குளிக்க முயன்ற வெண்ணிலா,ரமேஷ் மற்றும் கை குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.இந்த சம்பவத்தால் ராணிப்பேட்டை எஸ்பி., அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Updated On: 24 Feb 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  2. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  5. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  7. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  8. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  9. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...