Begin typing your search above and press return to search.
ஆடி கிருத்திகை அனுமதி மறுப்பு: ரத்தினகிரியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ஆடி கிருத்திகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இரத்தினகிரி பாலமுருகன் கோயில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
HIGHLIGHTS

இரத்தினகிரி பாலமுருகன் கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர்
இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள இரத்தினகிரி பாலமுருகன்,கோயில்,திமிரி குமரக்கோட்டம் முருகன் கோயில்,மற்றும் வாலாஜாப்பேட்டை அடுத்த கோவோந்தச்சேரியில் உள்ள ஞானமலை முருகன் கோயில் ஆகிய கோயில்களில் ஆண்டு தோறும் ஆடிக்கிருத்திகையையொட்டி விழாக்கள் நடந்து வந்தன. பொதுமக்கள் காவடி எடுத்து மேற்படி கோயில்களில் செலுத்தி வந்தனர் .
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் கொரோனாதடுப்பு. நடவடிக்கையாக கோயில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் காவடி செலுத்துவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
அதனைக் கண்டித்து, இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்தினகிரி பாலமுருகன் கோயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.