/* */

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி. வெறிச்சோடிய இராமநாதபுரம் மீன் சந்தை

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமலாக்கப்படுகிறது

HIGHLIGHTS

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி.  வெறிச்சோடிய இராமநாதபுரம் மீன் சந்தை
X

மீன்பிடி தடைகாலம் எதிரொலி காரணமாக  இராமநாதபுரம் மீன்மார்க்கெட் வெறிச்சோடியது.

மீன்பிடி தடைகாலம் எதிரொலி. இராமநாதபுரம் மீன்மார்க் கெட் வெறிச்சோடியது.

தமிழகத்தில் 61 நாள் மீன்பிடி தடைகாலம் தற்போது அமலில் இருந்து வருவதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திலும் அந்தந்த துறைமுகத்தில் விசைப்படகுகளை மீனவர்கள் பழுதுநீக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். ஆனால் தற்போது மீன்வரத்து குறைவால் இராமநாதபுரம் மீன் மார்க்கெட் மீன்கள் இன்றி வெறிச்சோடியது. இதனால் மீன்கள் வாங்க வந்த அசைவப் பிரியர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் என்று மீன்வளத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கடலில் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்க மீன்கள் இனப் பெருக்கத்திற்காகக் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப் படுவது வழக்கம். இந்த வருடத்திற்கான தடைக் காலம் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 61 நாட்களுக்கு விசை மற்றும் இழுவை படகுகள் மூலம் மீனவர்கள் யாரும் மின்பிடிக்கக் கடலுக்குச் செல்லக்கூடாது.

கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் விசை படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டும். திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை மீனவர்கள் இந்த காலத்தில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏப்ரல் முதல் ஜூன் வரை மீனவர்கள் தங்கள் விசை படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள்.தமிழ்நாட்டில் இன்று முதல் விசை படகுகள் கடலுக்கு செல்லாது என்ற காரணத்தால் மீன் வரத்து படிப்படியாக குறையும். அதேபோல் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் கிடைக்காது

Updated On: 1 Jun 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!