/* */

கடல் வழியாக கடத்த இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான ஐஸ் போதை பொருள் பறிமுதல்

தனுஷ்கோடி கடல் வழியாக மீன்பிடி விசைப்படகில் கடத்த இருந்த ஒரு கோடி மதிப்பிலான ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கடல் வழியாக கடத்த இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான ஐஸ் போதை பொருள் பறிமுதல்
X

ஐஸ் போதை பொருள்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சமீபகாலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலிருந்து கடல் அட்டைகள், மஞ்சள், கஞ்சா உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மத்திய, மாநில உளவுத்துறை போலீசார், கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இன்று போதைப் பொருள் ஒன்று கடத்தப்பட இருப்பதாக இராமேஸ்வரம் குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று மாலை இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில்; சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் மறைந்திருந்தனர்.
அப்போது தங்கச்சிமடம் பெட்டேல் நகரை சேர்ந்த பிரைட்வின் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் மீன் பிடிக்க செல்வதுபோல் மீனவர் ஒருவர் கைபை ஒன்றை படகில் ஏற்றிக்கொண்டு இருந்தார். இதனை கண்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அந்த பையில் 'கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன்' என்ற போதைப் பொருள் இருப்பது தெரிய வந்தது.
இதனை ஐஸ் என்றும் சின்தடிக் போதைப்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது. இதனையடுத்து படகின் உரிமையாளர் பிரைட்வின்; மற்றும் அக்காள்மடம் புயல் காப்பகம் பகுதியைச் சேர்ந்த டெஸ்மன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய முத்துப்பாண்டி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
போலிஸாரால் கைப்பற்றப்பட்ட கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் என்ற ஐஸ் போதைப் பொருள் உண்மையானதா என்பது குறித்து இராமநாதபுரத்தில் உள்ள தடவியல் போலீசார் வந்து ரசாயனம் மூலம் பரிசோதனை செய்து கிறிஸ்டல் மெத்தம் பீட்டபமைன் என்று உறுதிபடுத்தினர்.
இராமேஸ்வரம் போலீசாரால் கைபற்றப்பட்ட 957 கிராம் ஐஸ் போதை பொருளின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கடத்தல் போதைப்பொருள் பிடிபட்டதையடுத்து கடலோர பகுதிகளிலும், இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
Updated On: 10 April 2022 6:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்