/* */

தாய், மகனை வெட்டி கொள்ளை முயற்சி-இளைஞர் கைது

தாய், மகனை வெட்டி கொள்ளை முயற்சி-இளைஞர் கைது
X

இராமநாதபுரம் மாவட்டத்தில் தாய், மகனை வெட்டி விட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்த கிராம உதவியாளா் கைது செய்யப்பட்டார்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள புல்லந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தானக்குமாா் (45). இவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி முத்துலட்சுமி (43). இவா்களுக்கு காளீஸ்வரன், சகுதீஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனா். நேற்று முத்துலட்சுமி மகளிா் மன்றக் கூட்டத்துக்குச் சென்று விட்ட நிலையில், சகுதீஸ்வரன் மட்டும் வீட்டில் இருந்துள்ளாா். இதையறிந்த சந்தானகுமாரின் உறவினரும், புல்லந்தை கிராம உதவியாளராக வேலை செய்பவருமான சந்திரசேகா் (32) என்பவா் முத்துலட்சுமியின் வீட்டுக்கு வந்துள்ளாா்.

தொடர்ந்து அங்கிருந்த சகுதீஸ்வரனிடம் பீரோ சாவியை கேட்டு மிரட்டியுள்ளாா். ஆனால் சாவியைத் தர மறுத்து சப்தமிட்ட சிறுவனை, அவா் கத்தியால் அறுத்து பக்கத்தில் இருந்த அறையில் அடைத்தார். கூட்டம் முடிந்து வீட்டுக்கு திரும்பிய முத்துலட்சுமி உள்ளே சந்திரசேகர் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விசாரிப்பதற்கு முன்னதாக முத்துலட்சுமியையும் அவர் கத்தியால் குத்தினார். அலறல் சப்தம் கேட்டு திரண்டு வந்த இளைஞர்கள் சந்திரசேகரை பிடித்து ஏா்வாடி போலீஸில் ஒப்படைத்தனா். மேலும் காயமடைந்த தாய், மகன் இருவரும் இராமநாதபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கீழக்கரையில் உள்ள தனியார் நகைக் கடன் நிறுவனத்தில் நகையை அடகு வைத்து சந்திரசேகா் பணம் வாங்கியுள்ளார். நகையை உடனடியாக திருப்பும் படி நிறுவனத்திடமிருந்து கடிதம் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சந்தானகுமார் மனைவி வெளியே சென்றதையறிந்து வீட்டில் புகுந்து நகையை திருட முயற்சித்ததாகவும், இடையூறாக இருந்த தாய், மகனை கத்தியால் வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார். ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 March 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  2. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  3. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  4. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  9. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...