/* */

புதுக்கோட்டை டாஸ்மாக் குடோனில் ரூ. 1.75 லட்சம் மதுபானங்கள் கொள்ளை

புதுக்கோட்டை டாஸ்மாக் குடோனில் ரூ. 1.75 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை டாஸ்மாக் குடோனில் ரூ. 1.75 லட்சம் மதுபானங்கள் கொள்ளை
X

புதுக்கோட்டை சிப்காட்டில் உள்ள அரசு மதுபான குடோனில் 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானம் கொள்ளை போனது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபான ஆலைகளில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு மதுபானம் கொண்டு செல்வதற்காக புதுக்கோட்டை சிப்காட்டில் உள்ள அரசு மதுபான சேமிப்பு கிடங்கில் அனைத்து வகையான மதுபானங்களும் கொண்டுவந்து லாரிகள் மூலம் இறக்கி வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு இதேபோல் புதுக்கோட்டை சிப்காட்டில் உள்ள அரசு மதுபானக் குடோனில் லாரி மூலம் மதுபானம் ஏற்றி வந்த லாரி சிப்காட்டில் உள்ள அரசு குடோனில் வெளியே நிறுத்தி வைத்திருந்த பொழுது அந்த லாரியிலிருந்து 28 பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளை போயுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து இதுகுறித்து அதிகாரிகள் வெள்ளனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் தற்போது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபான குடோனில் இயங்கிவந்த சி.சி.டி.வி. கேமரா பழுதாகி உள்ளதால் எப்படி இந்த கொள்ளை சம்பவம் நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 March 2022 4:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...