/* */

பணியாளர்கள் தயாரிப்பு பொருட்களின் லாபம் பிரித்து கொடுக்கும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதி பேரூராட்சி சார்பில் தயாரிக்கப்படும் சுகந்தம் பினாயில் மற்றும் சோப் ஆயில் விற்பனை லாபத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பணியாளர்கள் தயாரிப்பு பொருட்களின்  லாபம் பிரித்து கொடுக்கும் நிகழ்ச்சி
X

பொன்னமராவதி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வண்ணம் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

அதில் முக்கிய அம்சமான சுகந்தம் பினாயில் மற்றும் சோப் ஆயில் தூய்மைப் பணியாளர்களால் தயாரிக்கப்பட்டு அதனை தூய்மைப் பணியாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில் கிடைக்கும் லாபத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சுகந்தம் பினாயில் மற்றும் சோப் ஆயில் விற்பனை லாபத்தை பிரித்து வழங்கும் நிகழ்ச்சி இன்று பேரூராட்சி எதிரே மண்டபத்தில் நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் தனபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், இளநிலை உதவியாளர் கனகமுத்து தலைமையில்அசோகா மெட்டல் உரிமையாளர் பாஸ்கர், அரசு ஒப்பந்தகாரர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு லாபத் தொகையை தூய்மை காவலர்களுக்குபிரித்து வழங்கினர். .

மேலும் இதில் வர்த்தகர் சங்க தலைவர் பழனியப்பன், அரசு ஒப்பந்தகாரர் வெங்கடேசன், யுனிக் டெக்னாலஜீஸ் நிறுவனர் ராஜ்குமார் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.


Updated On: 17 May 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’