/* */

அரசு மருத்துவமனைக்கு உபகரணங்களை வழங்கிய சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர்

சிறப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 60,000 மதிப்புள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் அதற்கான துணைக்கருவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனைக்கு உபகரணங்களை வழங்கிய சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர்
X

திருமயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கிய புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர் 

ஏசிடி கிராண்ட்ஸ், ஸ்வஸ்த் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3000த்தின் சிறப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 60,000 மதிப்புள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் அதற்கான துணை கருவிகளை புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை வகித்தார். சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் வெங்கடாசலம், ஓவியர் ரவி, சொக்கலிங்கம், டாக்டர். ராஜசேகர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரியின் முன்னாள் பொதுச் செயலாளர் கான் அப்துல் கபார் கான் சிறப்பு விருந்தினராகவும், ரோட்டரி மாவட்ட அறக்கட்டளை இயக்குனர் டாக்டர். ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், ரோட்டரி துணை ஆளுனர் சிவாஜி ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் கருவிகளை மருத்துவமனைக்கு வழங்கினர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் கருப்பசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.நிறைவில் சங்கத்தின் பொருளாளர் கதிரேசன் நன்றி கூறினார்.


Updated On: 19 Aug 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  8. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  9. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  10. ஈரோடு
    அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாசலம்