/* */

இரண்டாண்டு நிறைவு: நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கல்

தமிழ்நாடு அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற தலைப்பில் ஈராண்டு சாதனை விளக்க மலர் வெளியிடப்பட்டது

HIGHLIGHTS

இரண்டாண்டு நிறைவு: நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் வழங்கல்
X

மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற தலைப்பில் ஈராண்டு சாதனை விளக்க மலரினை வெளியிட்டு 520 பயனாளிகளுக்கு ரூ.90.76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைசட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஆணைகளை வழங்கும் விழா, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் “தமிழ்நாடு அரசின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” என்ற தலைப்பில் ஈராண்டு சாதனை விளக்க மலரினை வெளியீட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை (09.05.2023) வழங்கினார்கள்.

இதில், வேளாண்மைத்துறை 10 பயனாளிகளுக்கு ரூ.5.44 லட்சம் மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.11.05 லட்சம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளி நலத்துறை 5 பயனாளிகளுக்குரூ.5.27 லட்சம் மதிப்பிலும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 500 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சம் மதிப்பிலான மாதாந்திர நிதியுதவி ஆக மொத்தம் 520 பயனாளிகளுக்கு ரூ.90.76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சட்ட அமைச்சர் ரகுபதி பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் சிறப்பு திட்டங்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இதுபோன்ற ஏராளமான சாதனைகளை விளக்கி வெளியிட்டுள்ளவதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய பொதுமக்களின் முன்னேற்றத்தினை கருத்தில்கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்திவரும் இத்தகைய மக்கள்நலத் திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய முன்னேற்றத் திற்காக அயராது உழைத்துக் கொண்டியிருக்கிறார். அவருடைய உழைப்பின் சாதனையாக இரண்டு ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது.எனவே பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசு செயல் படுத்திவரும் இத்தகைய மக்கள்நலத் திட்டங்களை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன்.

மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.முருகேசன், நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத் அலி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 May 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்