/* */

செவித்திறன் குறைவுடைய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட செவித்திறன் குறைவுடையோருக்கானநடுநிலைப்பள்ளி மாணவர்கள் 43 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

செவித்திறன் குறைவுடைய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கல்
X

புதுக்கோட்டை மாவட்ட செவித்திறன் குறைவுடையோருக்கான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

புதுக்கோட்டை மாவட்ட செவித்திறன் குறைவுடையோருக்கான நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 43 பேருக்கு ரூ.2.59 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (06.05.2022) வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள இலவச பயண அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவித்திறன் குறைவுடையோருக்கான நடுநிலைப்பள்ளியினை, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் மானியக் கோரிக்கையில் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அறிவித்துள்ளார்.

இதன்மூலம் செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவியர்கள் தங்களது கல்வியை தொடர்ந்து இப்பள்ளியின் மூலம் பயில்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், மூன்று மாணவர்களுக்கு காக்ளியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இம்பிளாண்ட் கருவிகள் பொருத்தப்பட்டவர்களுக்கு, காக்கிளியர் இம்பிளாண்ட கருவிகளின் உதிரி பாகங்கள் பழுதடைந்ததை தொடந்து, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.61,135- மதிப்பில் செவித்திறன் குறைவுடைய மூன்று மாணவர்களுக்கு புதிதாக Cable, Dacapo power pack and Dacapo பிரேம் போன்ற உதிரி பாகங்கள் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் 40 செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு ரூ.1,98,250- மதிப்பில் காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலிக் கருவிகள் என மொத்தம் ரூ.2,59,385- மதிப்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை மாணவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு தங்களது கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 6 May 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்